Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaஏபிசி டாக்கீஸின் பிராந்திய விளம்பரத் தூதுவராக நடிகை சாக்ஷி அகர்வால் நியமனம்!

ஏபிசி டாக்கீஸின் பிராந்திய விளம்பரத் தூதுவராக நடிகை சாக்ஷி அகர்வால் நியமனம்!

Published on

சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் செயல்படுவார், இளம் திறமைகளை ஆதரிக்க ஏபிசி டாக்கீஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல் படுவதை மேலும் வலுப்படுத்துவார்.

தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால், பல்வேறு திறமைகளைக் கொண்டவர். அவர் ஆலோசனைக் குழுவில் இணைந்தது, சினிமாவில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஏபிசி டாக்கீஸ் முன்னணி தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்படும் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

இரட்டை பதவியில், சாக்ஷி அகர்வால் ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்திற்குத் தூரநோக்கு வழிகாட்டியாக இருந்து அதன் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை வடிவமைக்க உதவுவார். கேளிக்கை துறையில் அவரது பரந்த அனுபவமும், வளர்ந்து வரும் இளம் திறமைகளை ஆதரிக்கும் அவரது ஆர்வமும், ஏபிசி டாக்கீஸ் குழுவிற்கு ஒரு மறக்க முடியாத பலமாக இருக்கும். பிராந்திய விளம்பரத் தூதராகவும், அவர் பிராந்திய சந்தைகளில் தளத்தை ஊக்குவிக்க முக்கிய பங்காற்றுவார், மேலும் புதிய திரைப்பட இயக்குனர்களை தங்களுடைய படைப்புகளை ஏபிசி டாக்கீஸில் காட்சியிட ஊக்குவிப்பார்.

“சாக்ஷி அகர்வாலை எங்களின் ஆலோசனைக் குழுவில் இணைத்ததிலும், பிராந்திய விளம்பரத் தூதராகவும் நியமித்ததிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என ஏபிசி டாக்கீஸின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஷாலிபத்ரா ஷா கூறினார். “திரைப்படத் துறையின் ஆழமான புரிதலும், புதிய திறமைகளுக்கு வழிகாட்டும் அவருடைய அர்ப்பணிப்பும், எங்கள் முக்கிய இலக்குகளுடன் இணைந்துள்ளன. அவருடைய பங்களிப்பு சுயாதீன திரைப்பட இயக்குனர்களை ஆதரிப்பதில் எங்களின் முயற்சிகளை மிகவும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்”.

சாக்ஷி அகர்வால் தன்னுடைய புதிய பொறுப்பைப் பற்றிய தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி பேசும்பொழுது, “இளம் திரைப்பட இயக்குனர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு தளமாக செயல்படும் ஏபிசி டாக்கீஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கதைக்களத்தின் சக்தியில் நம்பிக்கையுள்ளவளாகவும் புதிய திறமைகளுக்கு வாய்ப்பு வழங்குவதின் அவசியத்தை உணர்வதாகவும் நான் நம்புகிறேன். ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பிராந்திய விளம்பரத் தூதராகவும் ஏபிசி டாக்கீஸின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நான் பங்களிக்க விரும்புகிறேன்” என்றார்.

சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு வெற்றி பெற தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க ஏபிசி டாக்கீஸ் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவரது நியமனம், கேளிக்கைத் துறைத்தளம் தனது தாக்கத்தையும் வளர்ச்சியையும் மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் நம்பிக்கையை வலியுறுத்துகிறது.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!