Thursday, January 22, 2026
spot_img
HomeMovie Reviewரெட்டதல சினிமா விமர்சனம்

ரெட்டதல சினிமா விமர்சனம்

Published on

கேங்ஸ்டர் மசாலாவில் புரட்டியெடுத்த கதை; அசத்தலான பிரமாண்ட மேக்கிங்கில் ‘ரெட்டதல.’

இளைஞன் காளியின் காதலி பணத்தாசை பிடித்தவள். அவளை திருப்திபடுத்த, தன்னைப் போலவே இருக்கிற உபேந்திரா என்ற கோடீஸ்வர இளைஞனை கொலை செய்து, அவனது அடையாளத்தைப் பயன்படுத்தி பணக்கார வாழ்க்கை வாழ திட்டமிடுகிறான். அதன்படியே கொலை செய்யும் காளி, உபேந்திராவாக மாறுகிறான். அப்படி மாறியபின் உபேந்திராவின் பணக்கார வாழ்க்கையை அனுபவிக்க முடிந்ததா? காதலியை திருப்திபடுத்த முடிந்ததா என்பது மீதிக் கதை… இயக்கம் கிரிஷ் திருக்குமரன்

அருண் விஜய்க்கு காளி, உபேந்திரா என இரண்டு கதாபாத்திரங்கள். இருவருமே கெட்டவர்கள். பணத்துக்காக எதைவேண்டுமானாலும் செய்பவர்கள். இவர் அவரை கொல்ல திட்டமிட, அவர் இவரைக் கொல்வதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறார் என கடந்தோடும் காட்சிகளில் படு ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இரு அருண் விஜய்யும் ஆக்சன் காட்சிகளில் சூறாவளியாக சுழன்றடிக்கிறார்கள். உணர்வுபூர்வமாக நடிப்பதிலும் குறையில்லை.

ஹீரோயினுக்கு ஏன் அந்தளவு பணத்தாசை என்பது புரியவில்லை. அடுத்த நிமிடம் அவரது உயிர் அவரிடம் இருக்காது என்பது போன்ற படு பயங்கர சூழ்நிலையில்கூட பணம்தான் முக்கியம் என்கிறார். அப்படியொரு மோசமான கேரக்டரை ஏற்றிருக்கும் சித்தி இத்னானியின் நடிப்பும் புசுபுசுவென்றிருக்கிற இளமையான உடற்கட்டும் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியும் கவர்கிறது.

ஹீரோக்கள் இருவருமே தாதாக்கள்தான், கேங்ஸ்டர்கள்தான். அது போதாதென்று அவர்களை சுற்றி வளைக்க ஹரிஷ் பெரடி, தான்யா ரவிச்சந்திரன் என இன்னும் சிலரும் கேங்ஸ்டர்களாக வெறியெடுத்து திரிகிறார்கள். கெட்ட போலீஸாக ஜான் விஜய்யை பல படங்களில் பார்த்தாயிற்று; மீண்டும் அதே ஜெராக்ஸாக பார்க்க முடிகிறது.

பின்னணி இசையில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அதிரடி ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் சாம் சி எஸ் ‘கண்ணம்மா’ பாடலை ரசிக்க வைக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் திரும்பிய பக்கமெல்லாம் இருட்டாக இருக்க, அதற்குள் டிஜோ டோம்னியின் கேமரா பயணித்திருக்கும் விதத்தில் காட்சிகள் தரமாக சுருட்டப்பட்டுள்ளன.

யார் வில்லன், யார் ஹீரோ, துரத்தல்கள் எதற்காக, யார் யாரை சுட்டுக் கொல்கிறார்கள், எதற்காக கொல்கிறார்கள் என்பதெல்லாம் குழப்பமாக இருந்தாலும், திரைக்கதையில் ஆடியன்ஸை கட்டிப்போடும் மேஜிக் இல்லையென்றாலும் ஆக்சன் ட்ரீட்டாக பார்த்தால் உற்சாகத்துக்கு உத்தரவாதம் தருகிறது ‘ரெட்டதல.’

Rating 3.5 / 5 

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!