நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல எளிய மக்களுக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகள் செய்து வந்துள்ளார், சில மாதங்களுக்கு முன்பு ‘மாற்றம்’ எனும் பெயரில் புதிய அறக்கட்டளை துவங்கி, பல ஊர்களுக்கு தானே நேரில் சென்று, பல டிராக்டர்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த ஊர்களில் உள்ள விதவை தாய்மார்கள் தங்களுக்கு தையல் மிஷின் வழங்கினால் நாங்கள் அதை வைத்து எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம் என்று கேட்டிருந்ததைத் தொடர்ந்து, தானும் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக நாளை அக்டோபர் 29-ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு, அந்த விதவை தாய்மார்களுக்கு தான் சொந்த செலவில் தையல் மெஷின்களை, இன்று தனது வீட்டிற்கு நேரில் வர வைத்து வழங்கி, அவர்களை நெகிழ வைத்துள்ளார்.