HomeCinemaபொதுமக்களின் வரவேற்பைக் குவித்த ரயில் திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆஹா ஓடிடி'யில் ரிலீஸ்!

பொதுமக்களின் வரவேற்பைக் குவித்த ரயில் திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆஹா ஓடிடி’யில் ரிலீஸ்!

Published on

பெரு முதலாளிகள் சாதி, மதங்களைக் கடந்து, சுயநலத்துக்காக எப்போதும் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால். உழைக்கும் மக்கள் எப்போதும் தங்களுக்குள் பகைமை பாராட்டி, அடிப்படைவாதிகளால் அடித்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள் என்ற கருத்தை மிகவும் அழுத்தமான திரைக்கதையில் சொல்லியிருந்த படம் ‘ரயில்.’

வடக்கன் என பெயர் வைக்கப்பட்டு சென்சார் தடையால் ரயில் என மாற்றப்பட்டு, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பரவலான கவனம் பெற்ற இந்த படத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

உழைக்கும் தமிழர்கள் குடிநோய்க்கு அடிமையான நிலையில், அவர்களின் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டு, அந்த இடத்தில் வடநாட்டு கூலிகளை அனுமதிக்கும் தமிழ்நாட்டுச் சூழல் ஒருபக்கம் என்றால், அடையாள அரசியல்வாதிகளின் காட்டமான எதிர்வினை இன்னொரு பக்கம் என அனைத்தையும் கடந்து, ரயில் திரைப்படம், பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையம் ரயில் திரைப்படக் குழுவிற்கு பாராட்டு விழா நடத்தி வரவேற்றது.

அப்படியான அங்கீகாரங்களை சம்பாதித்த ரயில், திரையரங்குகளில் வெளியான நீளத்திலிருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆஹா ஓடிடி’யில் வெளியாகிறது.

படக்குழு:-
தயாரிப்பு – மு. வேடியப்பன்
எழுத்து, இயக்கம் – பாஸ்கர் சக்தி
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
இசை -எஸ். ஜே. ஜனனி
பாடல்கள் – ரமேஷ் வைத்யா
எடிட்டிங் -நாகூரான் ராமச்சந்திரன்

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this