விக்ரம் பிரபு நடிக்க, ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டுவரக்கூடிய ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் கார்த்தி இயக்கியிருக்கும் படம் ‘ரெய்டு.’
இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கிறார். அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளி வெளியீடாக திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது.
முன்பு வெளியான ‘டாணாக்காரன்’, சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நேர்த்தியாக நடித்ததன் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ரசிகர்களின் வரவேற்பு பெருகியுள்ளது. அதையடுத்து இந்த படம் வெளியாகவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்ரம் பிரபு ஸ்டைலான தோற்றத்தில் வருகிற இந்த படத்தின் டீசர் முன்பே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘இந்தப் படம் ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு நிச்சயம் தீபாவளி விருந்தாக அமையும்’ என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
படக்குழு:-
தயாரிப்பு – எஸ்.கே. கனிஷ்க் & ஜிகேமணிகண்ணன்
ஒளிப்பதிவு – கதிரவன்
இசை – சாம் சிஎஸ்
படத்தொகுப்பு – , மணிமாறன்
சண்டைப் பயிற்சி – கே.கணேஷ்