Thursday, February 22, 2024
spot_img
HomeCinemaவித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜை கெடுக்க வேண்டாம் என்று நினைத்தேன்! -‘ரூட் நம்பர் 17' படத்தின்...

வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜை கெடுக்க வேண்டாம் என்று நினைத்தேன்! -‘ரூட் நம்பர் 17′ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அவுசபச்சன் பேச்சு

Published on

ஏராளமான சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ், கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ள படம் ‘ரூட் நம்பர் 17.’

ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசபச்சன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக டிரெய்லர் வெளியீட்டு விழா டிசம்பர் 13; 2023 மாலை சென்னையில் நடந்தது.

சிறப்பு விருந்தினார்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் பேசும்போது, ‘‘ஜித்தன் ரமேஷ் என்கிற ஒரு நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட படம் இது. எனக்கும் அவருக்கும் நான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வந்த காலத்திலிருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. படப்பிடிப்பை கிட்டத்தட்ட பத்து ஷெட்யூல்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தாங்க முடியாத கடும் வெப்பத்தில் 29 நாட்கள் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு அறையில் காட்சிகளை படமாக்கியபோது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வெளியே வந்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொண்டு அதன்பிறகு மீண்டும் அந்த காட்சியில் நடிப்பதற்காக கீழே வந்து விடுவார்.

பொதுவாக தயாரிப்பாளர்கள் செட்டுக்கு வந்தால் ஒரே டென்ஷனாக இருக்கும் ஆனால் எனது தயாரிப்பாளர் செட்டுக்கு வந்தாலே கலகலப்பாக இருக்கும். என் முதல் படமும் இவர் தான் தயாரித்தார். இயக்குனர் அவுசப்பச்சன் இந்த படத்தின் இசையமைப்பாளராக மட்டுமல்ல படத்தின் ஸ்கிரிப்டிலும் சில ஆலோசனைகளை சொல்வார். கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குநர் என்று கூட அவரை சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மேல் உயரம் என்பதால் பல காட்சிகளை கிரேன் உதவி இல்லாமலேயே படமாக்கினோம். இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள அருவி மதன் தமிழ் சினிமாவில் 100% நல்ல மனிதர் என்று சொல்லலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடைபெற்ற போது தொடர்ந்து நான்கு நாட்கள் விழாமல் மழை பெய்து படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை இருந்தது. அதனால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு இன்னொரு சமயம் வந்து நடத்தலாம் என அனைவருக்கும் சம்பளத்தை கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அருவி மதன் இந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தாதது தயாரிப்பாளர், இயக்குனர் யாருடைய தவறும் இல்லை. இயற்கையின் விளைவு. நான் உழைப்பை கொடுக்காத எந்த விஷயத்திற்கும் ஊதியம் பெற மாட்டேன் என்று சொன்னார். அந்த அளவு உன்னதமான மனிதர். இந்த படத்தில் எதெல்லாம் தரமாக இருக்கிறதோ அது என்னுடைய மொத்த குழுவின் உழைப்பு என்று சொல்லலாம். எங்கெல்லாம் தரம் சற்று குறைவாக இருக்கிறதோ அதை என்னுடைய மைனஸ் பாயிண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த படத்தின் இரண்டாவது ஹீரோ அகில் அவரை மாதிரி ஒரு பையனை பார்த்ததில்லை. நாம் சொன்னதை அப்படியே கேட்டு நடிக்கும் நடிகர். 2 மணி நேரம் போரடிக்காமல் போகும் விதமாக இந்த படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறேன். படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்’ என்றார்.

நாயகன் ஜித்தன் ரமேஷ், “நானும் அபிலாஷும் எப்போது ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். அப்போது தாய்நிலம் என்கிற படத்தை எடுத்திருந்த அவர் உங்களுக்காக ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்ன கதை விறுவிறுப்பாக இருந்தது.

90% படம் காட்டில் தான் படமாக்கப்பட்டது அதிலும் நிறைய காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன. அந்த குகைக்குள் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருந்து நடித்தோம். மூச்சு விடவே சிரமப்பட்டோம். அது மட்டுமல்ல இந்த படத்தின் பட்ஜெட்டிலேயே மெழுகுவர்த்திக்கு தான் அதிகம் செலவழித்து இருப்பார்கள் என நினைக்கிறன். அந்த அளவிற்கு படப்பிடிப்பு தளத்தில் மெழுகுவர்த்தி பயன்பட்டது.

இந்த படத்தின் நாயகி அஞ்சு, தண்ணீரில் குளித்ததை விட சேற்றில் தான் அதிகம் குளித்து இருப்பார். கிட்டத்தட்ட 30 நாட்கள் இதே போன்று தான் அவரது நிலை இருந்தது. இடையில் கால் உடைந்து ஓய்வு எடுக்க வேண்டியது கூட இருந்தது. ஆனாலும் தனது பணியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவுசப்பச்சன் சாரின் கடின உழைப்பால் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. படம் வெளியாகுமபோது நிச்சயம் பின்னணி இசை ஹிட் ஆகும்” என்றார்.

நடிகை கோமல் சர்மா, “இயக்குநர் அபிலாஷுடன் அமர்ந்து இந்த படத்தை பார்த்தேன். இடையில் பிரேக் விட்டபோது கூட எதற்காக படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும்போது இப்படி நிறுத்துகிறார்கள் என்று நினைக்கும் அளவிற்கு படு வேகமாக கதை நகர்ந்தது” என்றார்.

இசையமைப்பாளர் அவுசப்பச்சன், “திரையுலகில் எனது பொன்விழா ஆண்டில் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்திற்கு இசையமைக்கிறேன். நான் இருபது வயது வரை தான் முழுவதும் கேரளாவில் வாசித்தேன். எனது சினிமா பயணத்தை இங்கே சென்னையில் தான் துவங்கினேன். கிட்டத்தட்ட 75 சதவீத நாட்கள் இங்கே சென்னையில் தான் இருந்துள்ளேன். இதுவரை பல நூறு படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் தமிழில் ஏன் நீங்கள் இசையமைக்கவில்லை என கேட்டகிறார்கள். எனது 35வது வருட திரையுலக பயணத்தின் போதுதான் என்னிடம் பணியாற்றிய வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லோரும் தமிழ் சினிமாவில் பிரமாதமாக இசையமைத்துக்கொண்டு இருந்தார்கள். நான் போய் ஏன் அவர்களை கெடுக்க வேண்டும் என மலையாள திரையுலகிலேயே நின்று விட்டேன்” என்றார்.

Latest articles

உறியடி விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய்குமார் 'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்...

யோகிபாபு நடிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தை இயக்கும் சுரேஷ் சங்கையா!

யோகிபாபு கதைநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், சுரேஷ் சங்கையா இயக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படைப்பாக உருவாகிறது. லவ்லின்...

இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான ‘கிடுகு’ பட இயக்குநரின் ‘நாதுராம் கோட்சே.’

'கிடுகு' பட இயக்குநரின் அடுத்த படைப்பாக, மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...

பல்வேறு படங்களில் கதாநாயகியாக கலக்கும் அறிமுக நடிகை ஜிஜ்னா!

பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்....

More like this

உறியடி விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய்குமார் 'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்...

யோகிபாபு நடிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தை இயக்கும் சுரேஷ் சங்கையா!

யோகிபாபு கதைநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், சுரேஷ் சங்கையா இயக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படைப்பாக உருவாகிறது. லவ்லின்...

இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான ‘கிடுகு’ பட இயக்குநரின் ‘நாதுராம் கோட்சே.’

'கிடுகு' பட இயக்குநரின் அடுத்த படைப்பாக, மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...