HomeMovie Reviewபேடிங்டன் இன் பெரு விமர்சனம்

பேடிங்டன் இன் பெரு விமர்சனம்

Published on

குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சு. அவங்களை குஷிப்படுத்த பெரு நாட்டுக்கு ஒரு டிரிப் கூட்டிட்டு போங்கன்னு உங்ககிட்டே சொன்னா, அதுக்கு பெருசா செலவாகுமேன்னு யோசிப்பீங்க. அம்புட்டு சீரியஸா யோசிக்காதீங்க. ‘பேடிங்டன் இன் பெரு’ன்னு ஒரு படம் வந்திருக்கு. அதுக்கு உங்க வீட்டு வாண்டுகளை அழைச்சிக்கிட்டு போங்க. பெரு நாட்டுக்கு போய் வந்த மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்.

கதைன்னு பார்த்தா, பேடிங்டன் கரடி அதோட அத்தை லூசியை பார்க்குற நோக்கத்தோட கிளம்புது. அதை அரவணைச்சுப் பார்த்துக்கிற ப்ரெளன்ங்கிறவரோட குடும்பமும் சேர்ந்துக்குது. லூசி அவரோட வசிப்பிடத்துல இல்லைன்னு தெரிஞ்சதும் அவரை தேடி எல் டொராடோவை நோக்கி பயணிக்க திட்டமிட்டு கிளம்புறாங்க. அது சும்மா, மெட்ரோ ரயில்ல இந்த ஸ்டேசன்ல ஏறி அந்த ஸ்டேசன்ல இறங்குற மாதிரி ஈஸியான பயணமா இல்லை. நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கு; சாகசங்கள் செய்ய வேண்டியிருக்கு. அதையெல்லாம் கடந்து லூசிய அவங்க எப்படி, எங்கே சந்திக்கிறாங்க அப்படிங்கிறதுதான் கதையோட நிறைவு.

கரடிய யாருக்குத்தான் பிடிக்காது; அதுவும் தொப்பியெல்லாம் வெச்சிக்கிட்டு அந்த பேடிங்டன் நடந்து வரும் அழகே அழகு.

பேராசைக் காரரா, இல்லையில்ல பேராசை நோயால பாதிக்கப்படவரா வர்றவர்  ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ’ படத்தோட நாயகன் அன்டோனியோ பண்டேராஸ். அவர் பேடிங்டனுக்கு ஆற்றைக் கடக்க உதவுதறதும் அதனாலேயே சிலபல அவஸ்தைகள்ல சிக்குறதும் சுவாரஸ்யம்.

மத்த எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க. யாரையுமே குறை சொல்ல முடியாது.

அதுக்கு அடுத்து லொகேசங்கள்… அழகா இருக்குறது அமேசான் நதியா, அந்த காடா, மலையான்னு கேட்டா பதில் சொல்ல முடியாம திணறிப்போவோம். அந்தளவுக்கு எல்லாத்தையும் அழகா காட்டியிருக்கார் ஒளிப்பதிவாளர் எரிக் வில்ஸன்.

இந்த படத்தோட முதல் பாகத்துல கரடி ப்ரொளன் குடும்பத்தோட சேருறது, அவங்க அந்த கரடிக்கு அதை சந்திச்ச பேடிங்டன் ரயில்வே ஸ்டேசனோட பெயரை வைக்கிறதுன்னு போகும். அடுத்த பாகத்துல பேடிங்டன் மேல திருட்டுப் பழி விழறதும் அதுலேருந்து தப்பிக்கிறதுமா விறுவிறுப்பா போகும். இந்த 3-வது பாகம் பெரு நாடு, தங்கச் சுரங்கம் அது இதுன்னு கலர்ஃபுல்லா, கலககலா போகுது.

முதல் இரண்டு பாகங்களை பார்க்கலைன்னாலும் கவலைப்பட வேணாம். இந்த பாகத்தை தனியா பார்த்தாலே கதை புரிஞ்சுடும். உங்க குழந்தைங்க ரொம்பவே என்ஜாய் பண்ணுவாங்க; நீங்களும் ரசிப்பீங்க.

Latest articles

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன் நிறுவனர் யுவராஜ் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- வணக்கம், திரைத்துறையில் புதிய திறமைகளை...

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி, ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநர் இயக்கிய ‘முதற்கனல்’ மே மாதம் வெளியாகிறது!

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற...

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

https://www.youtube.com/watch?v=b-5O5p4oEng தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ...

ஜி.வி.பிரகாஷின் பதிய படத்தை ‘ஜோ’ பட இயக்குநர் இயக்க நாயகியாகிறார் ஜோ பட நாயகி மாளவிகா மனோஜ்!

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்கவுள்ள புதிய படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘கருடன்’...

More like this