HomeCinemaதடைகளைத் தாண்டி ராணுவத்தில் கால் பதித்து சாதனை படைக்கும் கதாநாயகி... கலா அல்லூரி இயக்கும் பரிசு...

தடைகளைத் தாண்டி ராணுவத்தில் கால் பதித்து சாதனை படைக்கும் கதாநாயகி… கலா அல்லூரி இயக்கும் பரிசு படத்தில் பரபரக்கும் திரைக்கதை!

Published on

திரைப்படக் கல்லூரியில் திரைப்பட தொழில்நுட்பம் கற்றுள்ள கலா அல்லூரி இயக்கும் முதல் படம் ‘பரிசு.’

பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டும் திரையலகத்தில் ஒரு பெண்ணை சாதனைப் பெண்ணாக்கி அப் பாத்திரத்தை பெருமையுடன் உயர்த்திப் பிடிக்கும் இந்தப் படம் நல்ல முயற்சி தான் என்பதைப் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள் என்று படம் பற்றி பேசத் துவங்குகிய இயக்குநர்…

“தந்தை ஓர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. தந்தை கூறுகிறார் நான் மற்றவர்கள் போல் உன்னை டாக்டர் ஆக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என்று கனவு காணவில்லை . நீ நம் நாட்டிற்குச் சேவை செய்யும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவு என்கிறார் .

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் அதை நாட்டுக்காக செய்வது பெருமை என்று சிறுவயதிலேயே உணர்த்துகிறார் அந்தத் தந்தை.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவரது மகள்,அப்பாவின் விருப்பப்படியே இராணுவத்தில் சேர்கிறாள். ஒரு பெண்ணாகவும் ராணுவ வீரராகவும் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தடைகளையும் அவள் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறாள் என்பதையும் கூறுவதே இந்தப் படம்.ஒரு தந்தைக்கு மகள் அளிக்கும் பரிசு, நாட்டுக்குச் சேவை செய்வது என்ற கருத்தைச் சொல்கிறது இப்படம்,

நம் நாட்டில் பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறி வருகிறார்கள்.அதற்குரிய வாய்ப்புகளை நமது அரசாங்கம் அளிக்கின்றது, அதைப் பின்பற்றி இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கிறார்கள்.அதிலும் முக்கியமாக இராணுவ துறையில் முன்னேறி வருகிறார்கள்.

இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான நாயகியும் தடைகளை மீறி சாதனை படைக்கிறாள்.

நாட்டுக்கான பாதுகாப்பு சேவை மட்டுமல்ல விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும், நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்கிற கருத்துகளும் படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதற்காக தூய்மை இந்தியா பற்றி ஒரு பாடலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

சின்மயி, சக்திஸ்ரீ கோபாலன், மானசி, வந்தனா சீனிவாசன், ரஞ்சித் பாடியுள்ளனர்.
படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.

படத்தின் கதை மையம் கொள்ளும் பிரதான பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். ஜான்விகாவுக்கு சினிமா மீது அபரிமித ஆர்வம். ஏராளமான முன் தயாரிப்புகளுடன் படத்தில் ஈடுபாட்டுடன் நடித்ததுடன் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் சண்டை போட்டுள்ளார்.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவியாகவும், விவசாயம் செய்யும் பெண்ணாகவும், ராணுவ வீரராகவும் என்று மூன்று மாறுபட்ட தளங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி உள்ளார்.முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெய் பாலா, கிரண் பிரதீப், நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன், ஆகியோரும் நடித்துள்ளனர்” என்றார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: சங்கர் செல்வராஜ்
இசை: ராஜீஷ்
பின்னணி இசை: சி.வி. ஹமரா
எடிட்டிங்: சி. எஸ். பிரேம்குமார்
நடனம்: சுரேஷ்சித்
சண்டைக் காட்சி: கோட்டி, இளங்கோ
வடிவமைப்பு: அஞ்சலை முருகன்

 

 

 

Latest articles

காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகிற ‘EYES’ மலையாள தொடர் அக்டோபர் 9 முதல் Sony LIV தளத்தில் காணலாம்!

Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது,அக்டோபர் 9...

நற்பணி இயக்தினரையும் ரசிகர்களையும் சந்தித்து உற்சாகமூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில்...

ரியோராஜ் நடிப்பில் ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சிவகார்த்திகேயன், சூரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக...

புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான திரைப் படைப்புகளை உருவாக்க ‘மந்திரா ஸ்டுடியோஸ்.’ –ஆர்.டி. ராஜா அறிவிப்பு

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய...

More like this

காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகிற ‘EYES’ மலையாள தொடர் அக்டோபர் 9 முதல் Sony LIV தளத்தில் காணலாம்!

Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது,அக்டோபர் 9...

நற்பணி இயக்தினரையும் ரசிகர்களையும் சந்தித்து உற்சாகமூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில்...

ரியோராஜ் நடிப்பில் ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சிவகார்த்திகேயன், சூரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக...