HomeCinemaசெய்தி நிறுவனங்களில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டி புதிய சாதனை படைத்த புதிய தலைமுறை!

செய்தி நிறுவனங்களில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டி புதிய சாதனை படைத்த புதிய தலைமுறை!

Published on

தமிழ் செய்தி நிறுவனங்களில் இதுவரை எந்த நிறுவனமும் எட்டாத புதியதொரு சாதனையைப் படைத்திருக்கிறது புதிய தலைமுறை. ஆம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்கள். டிஜிட்டல் யுகத்தில் ஒரு கோடி என்பது எவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பது அதில் தினமும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்குத் தெரியும். அதிலும் எந்தவித சமரசங்களுமின்றி இந்த எண்ணிக்கையை சாத்தியமாக்கியிருக்கிறது புதிய தலைமுறை.

புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 13 வருடங்கள் மற்றும் டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டு 11 வருடங்கள் ஆகின்றது. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சற்றும் ஓய்ந்துவிடாமல் ஆயிரம்கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறி வருகிறது.

உண்மை உடனுக்குடன் என்ற நோக்கில் செய்திகளில் பிழை இன்றியும், சமரசம் இன்றியும், சார்பு இன்றியும் தொடர்ந்து நடுநிலையோடு செயல்பட்டு வரும் இந்தத்த் தொலைக்காட்சி.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமான பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. K Questions, PT International, PT National, PT Digital explainers, தளபதி, World Cup 2023, எதையாவது பேசுவோம், PT Talks, The political SPYder, Pt digital voice என பிரத்யேக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இவற்றைத் தாண்டி தினசரி செய்திகள், நேர்படப் பேசு தொகுப்புகள், சிறப்பு நேர்காணல்கள், Big story, நயம்படச் சொல், குற்றம் குற்றமே, வட்டமேசை, அக்னி பரிட்சை, வீடு போன்ற தொலைக்காட்சி exclusive நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை, ஆசிய விளையாட்டுப்போட்டிகள், நடப்பு உலகக்கோப்பை தொடர், சந்திரயான் 3, ஆதித்யா எல்.1,  கர்நாடக சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 2024 போன்ற நிகழ்வுகளில் பல்வேறு விவரங்களையும் விரிவாக ஆராய்ந்து உடனுக்குடன் வழங்கியது புதிய தலைமுறை. மேலும்  மணிப்பூர் விவகாரம், ஒடிசா ரயில் விபத்து, ஆந்திர ரயில் விபத்து , இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னை போன்றவற்றில், களத்திலிருந்தே தகவல்களை சேகரித்து பிரத்யேகமாக நேயர்களுக்கு கொடுத்தது!

தொடர்ந்து சமரசம் இன்றியும், சற்றும் சளைக்காமலும் உழைத்ததன் பலனாய் புதிய தலைமுறை யூ டியூப் தளம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை தற்போது பெற்றுள்ளது. தமிழின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனம், டிஜிட்டலிலும் கோலோச்சி ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்ஸ் என்ற சாதனையை எட்டியதற்கு அரசியல், திரை பிரபலங்கள் உட்பட  பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...