Friday, March 28, 2025
spot_img
HomeCinemaஅல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டிசம்பர் 6-ம் தேதி ரிலீஸ்!

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2’ டிசம்பர் 6-ம் தேதி ரிலீஸ்!

Published on

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம். இந்த படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படம் முதலில் ஆகஸ்ட் 15, 2024 எனத் திட்டமிடப்பட்டு பின்பு வெளியீட்டுத் தேதி டிசம்பர் 6, 2024க்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணத்தையும் படக்குழு சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதை அடைய, படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘புஷ்பா2’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. படத்தின் புரோமோஷனாக வெளியான பாடல்கள் மற்றும் டீசர் என ஒவ்வொன்றும் இயற்கையாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சமீபத்தில் மாஸ் ஜாதரா டீசர், எனர்ஜிடிக்கான ‘புஷ்பா புஷ்பா’ டைட்டில் பாடல் மற்றும் ‘அங்காரன்’ காதல் பாடல் என இவை யூடியூப் பிளாட்ஃபார்மில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. நீண்ட காலத்திற்கு முதல் 10 இடங்களில் யூடியூபில் பிரபலமாக இருந்தன. மேலும், இந்தப் பாடல்கள் ரீல்ஸ் கண்டெண்ட்டாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this