குறும்படங்கள் இயக்கிய அனுபவமுள்ள அருள்ராஜ் பன்னீர்செல்வம் இயக்கும் திரைப்படம் ‘பொல்லாத பூமி.’
இந்த படத்தின் துவக்க விழாவும், படத்தின் தலைப்பு அறிமுகமும் சென்னையில் மார்ச் 1; 2024 அன்று நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கிளாப் அடித்து படத்தின் தலைப்பை அறிமுகம் செய்து வைத்து படக் குழுவினரை வாழ்த்தினார்.
இந்த படத்தை மகா கிரியேஷன்ஸ் சார்பில் பி. அன்பழகன் தயாரிக்கிறார்.
ஆதித்யா கோவிந்தன் ஒளிப்பதிவு செய்ய, ஜெயப்பிரகாஷ் இசையமைக்கிறார். அஜின் காமராஜ் படத்தொகுப்பு செய்கிறார். சதீஷ் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.