Monday, March 24, 2025
spot_img
HomeCinemaரஜித் மேனன் நடிப்பில் இரண்டு காலககட்டங்களை இணைக்கும் சஸ்பென்ஸ் ஃபேண்டஸியான காதல் கதை! விரைவில் படப்பிடிப்பு

ரஜித் மேனன் நடிப்பில் இரண்டு காலககட்டங்களை இணைக்கும் சஸ்பென்ஸ் ஃபேண்டஸியான காதல் கதை! விரைவில் படப்பிடிப்பு

Published on

ரஜித் மேனன் நடிக்க, விளம்பர படங்கள் மற்றும் கார்ப்பரேட் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட வீஜெ. மீனாட்சி சுந்தரம் இயக்கும் முதல் படம், போஸ்ட் production மற்றும் கார்பரேட், விளம்பர பட சேவைகளை வழங்கி கொண்டு இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் மீடியா Solutions Private Limited நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘புரொடக்‌ஷன்ஸ் நம்பர் 1’  என்ற பெயரில் ஃபேண்டஸியான காதல் கதை திரைப்படமாக உருவாகிறது.

1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸியாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருக்கிறோம் என்றார் இயக்குநர்.

கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.

இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித்.CR நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விருது பெற்ற கன்னட திரைப்படமான ‘கோழி எஸ்ரூ’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சீஸ் ராஜ்குமார்.ஏ (Francis Rajkumar A) ஒளிப்பதிவு, இசைத்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த ஷீன் எல்.க்ளஃபோர்ட் (Shean L.Cleford) இசை, ‘யாத்திசை’ மற்றும் ‘ஞானசெருக்கு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு, என பலம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு தரமான படமாகவும், கமர்ஷியல் ரீதியாக பிரமாண்டமாகவும் இப்படம் உருவாகவுள்ளது.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this