HomeCinemaஅஜய் திஷன் நடிக்கும் 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!

அஜய் திஷன் நடிக்கும் ‘பூக்கி’ பூஜையுடன் துவங்கியது!

Published on

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற அஜய் திஷன் நாயகனாக நடிக்கும் ‘பூக்கி’ திரைப்படம்  பூஜையுடன் துவங்கியது.

நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த படம் அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகிறது.

இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக கொஞ்சி அழைக்கும் வார்த்தை ‘பூக்கி.’ கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் நாயகியாக தனுஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில்  பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக் பாஸ் சத்யா, எம் ஜே ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நாயகனாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் விஜய் ஆண்டனி, தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையாக இருக்குகிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this