‘கடிகார மனிதர்கள்’ படத்தின் மூலம் காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் பிரதீப் ஜோஸ்.கே.
சமூக சேவகரான இவர் கராத்தே கலையில் தேர்ந்தவர். மாநில அளவிலான பேஸ்கட்பால் விளையாட்டு வீரரும் கூட!
ஷங்கரின் உதவியாளர் அரண் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடித்த ‘ஜிகிரி தோஸ்த்’ படத்தில் கமாண்டராக ஒரு கனமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இ.பிரகாஷ் இயக்கத்தில் சதீஷ், யோகிபாபு, பிக்பாஸ் டேனியல், தேவ் சிவகுமார் ஆகியோருடன் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படங்களை தயாரித்திருப்பதும் இவரே.
மேற்குறிப்பிட்ட படங்கள் அத்தனையும் அழுத்தமான கதையம்சமுள்ள படங்கள் என்பதால் அந்த படங்கள் வெளியானபின் தமிழ்த் திரையுலகினரின் பார்வை இவர் மீது திரும்பும் என்பதையும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடிப்பார் என்பதையும் உறுதியாக நம்பலாம்.
திரைப்படங்கள் தயாரிப்பு, நடிப்பு என பரபரப்பாக பயணிக்கும் பிரதீப் இன்னொரு பக்கம் ஜோஷ்.கே., சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டிவருகிறார்.
தான் வசிக்கும் கோவை கவுண்டம்பாளையம் மற்றும் அந்த பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வதால் அவர்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார். அவர் செய்துவரும் சமூக சேவைகளை கெளரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த தபால் தலையும் வெளியிடப் பட்டிருக்கிறது. அதற்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டும் வாழ்த்தும் குவிகிறது.