Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaசென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வாக்கத்தான்; தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ்...

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வாக்கத்தான்; தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு நடத்துகிறது!

Published on

தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மோசடி குறிப்பாக டேட்டா என்ட்ரி, சிஸ்டம் ஆபரேட்டர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதே போன்ற வேலைகளுக்கான மோசடிகள் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த வாக்கத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மோசடிகள் இதற்கு முன்பு பல இந்திய குடிமக்களை இணைய அடிமைத்தனம் மற்றும் சுரண்டலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

PoE அலுவலகம் சட்டவிரோத முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற மோசடி திட்டங்களுக்கு பலியாகாமல் தனிநபர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.

இந்த வாக்கத்தான் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைகிறது. ’பாத்து போங்க’ என்ற பெயரில் PoE அலுவலகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்ற நடைமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலை வாய்ப்புகளின் அபாயங்கள் குறித்து கற்பிக்கும்.

பொதுமக்கள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள் என அனைவரும் இந்த வாக்கத்தானில் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்பதற்கான சான்றிதழைப் பெற www.emigrate.gov.in/#/walkathon என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

மோசடிகளில் இருந்து அனைவரையும் பாதுகாக்கவும் சரியான தகவல்களுடன் அதிகாரம் கொடுக்கவும் இந்த வாக்கத்தானில் இணைவோம்! பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்குவோம்!

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!