Tuesday, April 22, 2025
spot_img
HomeCinema‘பார்க்கிங்' படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைப் பற்றி பேசிய...

‘பார்க்கிங்’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைப் பற்றி பேசிய ஹரிஷ் கல்யாண்!

Published on

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்டோர் நடிக்க, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் ‘பார்க்கிங்.’

வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வு நவம்பர் 25; 2023 அன்று நடந்தது.

நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “முதல் படத்தில் முடிந்தளவு பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியான கதை வேண்டும் என்பதால்தான் இதை எடுத்தேன். நம் எல்லோருக்கும் எதாவது ஒரு பேஷன் இருக்கும். அதை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருப்போம். அதையும் நம் குடும்பத்தையும் உடைக்கும்படி ஒரு பிரச்சினை வரும்போது நிச்சயம் நாம் கோபப்படுவோம். அதுதான் இந்த படத்தின் கதை. ஹீரோவாக இந்தக் கதையில் இருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும். அதை அப்படியே ஒத்துக் கொண்ட ஹரிஷ் அண்ணாவுக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர் போன்ற லெஜெண்ட்ரி நடிகரோடு வேலைப் பார்த்தது பெருமை.

படத்தை குடும்பத்தோடு பாருங்கள். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், “எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார். இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

நடிகை இந்துஜா, “இந்த படத்தில் என் கதாபாத்திரம் கர்ப்பமாக இருக்கும் மனைவி என்று சொன்னார்கள். கதை கேட்டதும் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்” என்றார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம். அதை ரசிக்கும்விதமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன்” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். வாழ்த்துகள்” என்றார்.

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!