Thursday, February 22, 2024
spot_img
HomeGeneralவட்டியில்லா இஎம்ஐ திட்டத்தில் வீடுகளுக்கான லிப்ட் வசதி! நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்...

வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தில் வீடுகளுக்கான லிப்ட் வசதி! நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் அறிமுகம்.

Published on

வீடுகளுக்கான லிப்ட் வசதியை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தங்களது தயாரிப்புகளை கொண்டும் செல்லும் வகையில் அவர்கள் எந்தவித சிரமும் இல்லாமல் தாங்கள் விரும்பிய லிப்ட்டை வாங்க வசதியாக வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் தங்கள் வீடுகளில் எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல் பாதுகாப்பான லிப்ட் வசதியை பெற முடியும்.

இஎம்ஐ திட்டம் என்று வரும்போது அதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் நிபாவைப் பொறுத்தவரை அவ்வாறு இல்லாமல் அந்த வசதியை சில நொடிகளில் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இதன் இணையதளத்தில் உள்ளன. இந்த எளிமையான வசதியை வாடிக்கையாளர்கள் https://nibavlifts.com/emi-eligibility/ என்ற இணையதளம் மூலம் அணுகலாம்.

இது குறித்து நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான விமல் ஆர். பாபு கூறுகையில், இந்த சிறப்பான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, “வீடுகளுக்கான லிப்ட் பிரிவில் வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் முன்னோடியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதன் காரணமாக தங்கள் வீடுகளில் லிப்ட் வசதியை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மேலும் எங்களின் விரிவாக்கப்பட்ட நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எங்களால் சிறப்பான சேவைகளை வழங்க முடியும். அத்துடன் எங்கள் வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் பராமரிப்பு ஆதரவு சேவைகளை பெறுவதற்கும் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த எளிய இஎம்ஐ திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர்களிடம் எங்களின் தயாரிப்புகளை கொண்டு செல்லவும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களிடம் அதிகரித்து வரும் இதன் தேவையை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் உலகம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் மட்டும் தனது அனுபவ மையங்களை 44–ல் இருந்து 71ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் நெட்வொர்க் விரிவாக்கம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதோடு, அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி, பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளை உடனுக்குடன் வழங்குகிறது. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி மற்றும் மன அமைதியை உறுதி செய்கிறது.

ஐரோப்பிய தரத்தில் உருவாக்கப்படும் நிபாவ் லிப்ட்கள், ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் இவை தயாரிக்கப்படுகின்றன. நிபாவின் காப்புரிமை பெற்ற வீடுகளுக்கான எலிவேட்டர்கள் வழக்கமான ஹைட்ராலிக் அமைப்புகளை விட குறைவான ஆற்றலை பயன்படுத்துகின்றன. மேலும் ஜீரோ சிவில் வேலை, சிறந்த கட்டமைப்பு, கிரீஸ் இல்லாத தொழில்நுட்பம் மற்றும் சக்கர நாற்காலி பயன்பாடு உள்ளிட்ட தொழில்துறையில் முன்னணி சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

நிபாவ் ஹோம் எலிவேட்டர்ஸ் பற்றி: தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம் TUV-சான்றளிக்கப்பட்ட, ஐரோப்பிய தரத்திலான ஹோம் லிப்ட்களை தயாரித்து வருகிறது. காற்றில் இயங்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த லிப்ட்கள் குறைந்த விலையில், ஆற்றல் திறன், எளிதில் உடைந்து விடாத வெளிப்புறங்கள், சக்கர நாற்காலி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னையில் 4 அதிநவீன உற்பத்தி மையங்கள் மற்றும் 2 ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்கள் உள்ளன. இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மெக்சிகோ, கனடா, கென்யா, நைஜீரியா, கானா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் 71 அனுபவ மையங்கள் மற்றும் அலுவலகங்களுடன் உலக அளவில் சிறப்பான நெட்வொர்க்கை கொண்டுள்ள நிபாவ் நிறுவனம் வீட்டு லிப்ட் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது.

Latest articles

இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான ‘கிடுகு’ பட இயக்குநரின் ‘நாதுராம் கோட்சே.’

'கிடுகு' பட இயக்குநரின் அடுத்த படைப்பாக, மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...

பல்வேறு படங்களில் கதாநாயகியாக கலக்கும் அறிமுக நடிகை ஜிஜ்னா!

பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்....

மார்ச் 1-ல் ரீ ரிலீஸாகிறது ஜீவா, கார்த்திகா நடித்த ‘கோ.’

ஜீவா, கார்த்திகா, அஜ்மல் நடிப்பில், கே.வி. ஆனந்த் இயக்கிய 'கோ படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள்...

மலையாள சினிமாவில் கதைக்காகத்தான் ஹீரோ; ஹீரோவுக்காக படம் எடுக்க மாட்டார்கள்! -‘என் சுவாசமே’ பட விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் பேச்சு

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாறுபட்ட காதல் படம் 'என் சுவாசமே.’ விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை...

More like this

இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான ‘கிடுகு’ பட இயக்குநரின் ‘நாதுராம் கோட்சே.’

'கிடுகு' பட இயக்குநரின் அடுத்த படைப்பாக, மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...

பல்வேறு படங்களில் கதாநாயகியாக கலக்கும் அறிமுக நடிகை ஜிஜ்னா!

பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்....

மார்ச் 1-ல் ரீ ரிலீஸாகிறது ஜீவா, கார்த்திகா நடித்த ‘கோ.’

ஜீவா, கார்த்திகா, அஜ்மல் நடிப்பில், கே.வி. ஆனந்த் இயக்கிய 'கோ படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள்...