Tuesday, September 10, 2024
spot_img
HomeCinemaகௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘நினைவெல்லாம் நீயடா' படத்தின் முதல் பாடல்!

கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் முதல் பாடல்!

Published on

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது ‘நினைவெல்லாம் நீயடா.’

பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ‘அருவா சண்ட’ படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.

பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது.

பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற முதல் பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர். நன்றி அவர்களுக்கு. பாடல் எல்லோராலும் விரும்பப்படுகிறது என்பதை பின்னூட்டங்களில் பார்க்க முடிகிறது. அருமையான ஒரு மெலடியாக அப்பாடல் அமைந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.

தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Latest articles

முக்கிய கதாபாத்திரத்தில் நாய்; ரஜினி ரசிகராக கதாநாயகன்; சென்டிமென்ட் கலந்த திரில்லராக ‘தில்ராஜா.’

விஜய் சத்யா ரஜினி ரசிகராக நடிக்கும் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரில்லர் திரைப்படம் 'தில்ராஜா.' சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார்,...

தங்கலானை கொண்டாடும் வட இந்திய மாநிலங்கள்… மகிழ்ச்சியில் படக்குழு.

சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க,  பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'தங்கலான்' தமிழ்,தெலுங்கு, மலையாளம்...

நடுக்கடலில் சவாலான ஷூட்டிங்… கொண்டல் படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

ஷபீர் கல்லரக்கல் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு துல்கர்...

தலைப்பிலும், அறிவிப்புகளிலும் அழகுத்தமிழ்… மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான்

அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி, இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும்...

More like this