Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaவிஜய் ஆதிராஜ் இயக்கும் 'நொடிக்கு நொடி' பூஜையுடன் துவக்கம்! 

விஜய் ஆதிராஜ் இயக்கும் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் துவக்கம்! 

Published on

விஜய் ஆதிராஜ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் நடிகராகவும் கொடி கட்டி பறந்தவர். ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய பயணத்தை தொடர்வதற்காக ‘நொடிக்கு நொடி’ எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். அந்த படம் பூஜையுடன் தொடங்கியது.

நாக்ஸ் ஸ்டுடியோஸ்’ ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் ‘செம்பி’ புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது ‘நொடிக்கு நொடி.’

திரைப்படம் குறித்து பேசிய விஜய் ஆதிராஜ், “விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு ‘நொடிக்கு நொடி’ மூலம் நனவகிறது. பரபரப்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நம்ரிதா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மேகா ராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்.

அம்ரேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமையான இசைக் கலைஞரான அவரது முழு பரிமாணமும் இப்படத்தில் வெளிப்படும். நான் இயக்கிய ‘புத்தகம்’ படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் முன்னணி எடிட்டராக திகழும் கெவின் ‘நொடிக்கு நொடி’ திரைப்படத்தின் தொடர்பை கையாளுகிறார்.

ஒளிப்பதிவுக்கு கோபிநாத், கலை இயக்கத்திற்கு ராமலிங்கம், நடனத்திற்கு ராஜு சுந்தரம், சண்டை பயிற்சியாளர் தினேஷ் காசி என முன்னணி கலைஞர்கள் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். நிர்வாக தயாரிப்பாளர்கள்: ஜி கண்ணன் & பாலு கே நிமோ. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் ‘நொடிக்கு நொடி’யை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!