HomeCinema75 தியேட்டர்களில் ரிலிஸாகும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.'

75 தியேட்டர்களில் ரிலிஸாகும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.’

Published on

பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமார் தயாரிக்க, சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.’

இளம் வயதினரின் நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பாசிட்டிவாக பேசுகிற இந்த படத்தில் செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரீத்தி கரண் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம்.அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் மார்ச் 8, 2024 அன்று எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ் மூலம் 75 திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் பற்றி தயாரிப்பாளர் பிரதீப்குமார் பேசியபோது, ”எஸ். ஹரி உத்ரா இந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி, இந்தப் படத்தை வெளியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள எங்களின் நோக்கம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு கண்ணியமான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பெரிய தூணாக இருந்த இயக்குநர் பிரசாத் ராமர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், குறிப்பாக எஸ். ஹரி உத்ராவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பிரதீப்குமார் படத்தை தயாரித்து, இசையமைக்க, ஒளிப்பதிவாளராக உதய் தங்கவேல் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்குநராக விஜய் ஆதிநாதன், டிஐ வண்ணக் கலைஞராக அமர்நாத், டைட்டில் சிஜி கலைஞராக சதீஷ் சேகர், இஸ்குவேர் மீடியா ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன் செய்துள்ளனர். தலைப்பு மற்றும் போஸ்டர் வடிவமைப்புக்கு யாதவ் ஜே.பி, ஒலிக்கலவைக்கு ஜி.சுரேன் பணியாற்றி உள்ளனர். ஜி.சுரேன் மற்றும் அழகியகூதன் ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர்.

Latest articles

வி.ஜி சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் என்.வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’....

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

தனது பத்தாவது படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர்; கலைஞர்களிடமிருந்து நேர்த்தியாக தனக்கு தேவையானதை வாங்கி விடுகிறார்! –‘பிளாஸ்ட்’ பட விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் பேச்சு

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

More like this