HomeCinemaஇந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான 'கிடுகு' பட இயக்குநரின் 'நாதுராம்...

இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான ‘கிடுகு’ பட இயக்குநரின் ‘நாதுராம் கோட்சே.’

Published on

‘கிடுகு’ பட இயக்குநரின் அடுத்த படைப்பாக, மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘நாதுராம் கோட்சே.’

சசி, ரவி, தாமரை, பீட்டர் சரவணன், இன்பா, சிவகுமார், வடிவேல் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள வீரமுருகனிடம் கேட்டபோது, ”மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

கோட்சே, காந்தியை சுட்டது இரண்டு புல்லட். ஆனால், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டது நான்கு புல்லட். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை இதில் சொல்கிறோம்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை ஆரம்பிக்கும் போது 42000 திருக்கோவில்கள் இருந்தன. ஆனால், இப்போது 22000 கோவில்கள் தான் இருக்கின்றன. இதன் மூலம் அழிக்கப்பட்ட கோவில்களின் உண்மை வரலாறு மட்டுமின்றி . இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள் தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.

இப்படி பல உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய, இந்த படம் மார்ச் 7ம் தேதி சிவன் OTT, பரமசிவன் OTT என்று புதிய OTT தளங்களில் வெளியாகவுள்ளது” என்றார்.

படத்தை ‘ராமலட்சுமி புரொடக்சன்ஸ்’, ‘ஈஞ்ச நாடு 18 பட்டி கணேஷ் நாகா புரொடக்சன்’, ‘சிவன் OTT’ ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

வீரமுருகன் இயக்கிய ‘கிடுகு’ தற்போது நடக்கும் அரசியல் பற்றிய பல உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டிருந்தது. அந்த படம் அரசியல் கட்சிகளிடையே பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது. படத்தை திரையங்குகளில் வெளியிட விடாமல் அரசியல் செய்தார்கள். அதனால், தாமரை யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டு பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது குறிப்பிடத்தக்க செய்தி.

படக்குழு:
இசை: கிடுகு படத்திற்கு இசையமைத்த ஜெர்சன்
ஒளிப்பதிவு: ஜெ கே & டீம்
எடிட்டிங்: விக்னேஷ்
கலை: திலக்
சவுண்ட்: சந்தோஷ்

Latest articles

அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்! -இயக்குநர் பேரரசு கோரிக்கை

பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு... அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை அரசு, தனியார் பேருந்துகளுக்கு நிர்ணயிக்க வேண்டும்! தீபாவளி,...

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உற்சாகமாக நடைபெற்ற ‘இராவணன் சோலையில் சிவன் மலை’ படத்தின் பூஜை! இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் 'இராவணன்...

 ஜாதி சார்ந்த கட்டுப்பாடு சமூகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது! – ‘பனங்காட்டான்’ குறித்து இயக்குநர் வீரமுருகன்  

மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை உள்ளிட்ட படங்களை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ள படம் 'பனங்காட்டான்.'...

நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு! 

https://www.youtube.com/watch?v=UUfAemccAJ0 தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ்...

More like this