HomeCinemaவெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

Published on

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க வேண்டும் என விரும்புகிற வேணி என்ற ஒரு பெண்மணியின் புத்திசாலித்தனமான செயல்பாடுகளும், அரங்கேற்றும் அராஜக அக்கிரமங்களும், அதனால் அவர் சந்திக்கும் விளைவுகளுமாக ராகுல் அசோக் இயக்கியிருக்கும் ‘வெஞ்சென்ஸ்.’

வேணியாக நடித்திருக்கிற அபர்ணதிக்கு கலெக்டராக கம்பீரம் காட்டுவது தொடங்கி, நடக்கும் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைப்பது என தீர்மானிக்கும் சக்தியாக உயர்வதுவரை திமிர், தெனாவட்டு, வேகம், விவேகம், கோபம், கொந்தளிப்பு என எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு. கெத்தான உடல்மொழியில் நடித்து கிடைத்த வாய்ப்புக்கு நியாயம் செய்திருக்கிறார்.

முதலமைச்சராக இளவரசு, முன்னாள் முதலமைச்சராக ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக சரவண சுப்பையா, மத்திய அமைச்சராக ஜான் விஜய், எதிர்க்கட்சித் தலைவராக லிவிங்ஸ்டன் என ஒவ்வொருவரின் கதாபாத்திர வடிவமைப்பும், அவர்களது நடிப்பும் நம்மை ஆள்கிற சிலரை நினைவுக்கு கொண்டுவருவது போலிருக்கிறது.

சாய் தன்யா, ரேகா நாயர், குழந்தை சம்யுக்தா, டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமராக மங்கல் என மற்றவர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

படத்தை பிரமாண்டமாக காட்டும்படி கேமரா கோணங்களை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு. கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பாஸ்மார்க் தரும் அளவிலேயே இருக்கிறது.

அரசியல் களம் எப்படியிருக்கிறது, அரசியல்வாதிகள் எப்படியிருக்கிறார்கள், அவர்கள் தேர்தல் வெற்றிக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் தொகுத்துக் காண்பித்திருப்பதில் புதிதாக ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தால், கதை 2042-ல் நடக்கிறது. அதைத் தாண்டி எதையாவது எதிர்பார்த்தால் ஏமாற்றமடைய வேண்டியிருக்கும்.

சில காட்சிகளில் இருக்கிற சுவாரஸ்யங்களுக்காக, பரபரப்புக்காக வேண்டுமானால் பார்க்கலாம்.

Rating 2.5 / 5

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this