Monday, February 10, 2025
spot_img
HomeCinemaவேல்ஸ் பல்கலைக்கழகம் மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு இணைந்து நடத்திய மாபெரும் திரைப்பட விருது...

வேல்ஸ் பல்கலைக்கழகம் மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு இணைந்து நடத்திய மாபெரும் திரைப்பட விருது விழா! இயக்குநர்கள் பார்த்திபன், வசந்தபாலன் பங்கேற்பு

Published on

மெய் எனும் பெயரில் திரைப்பட ஆர்வலர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து திரைப்பட விழாவினை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. மாதந்தோறும் நடந்து வரும் இந்த திரைப்பட திருவிழாவினை அதன் நிர்வாக இயக்குநர் எஸ். ஜெயசீலன், அன்பழகன் ஆகியோர் தொலை நோக்குப்பார்வையுடன் வழிநடத்தி வருகின்றார்கள்.

மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஜூலை 19 அன்று நடத்திய மாபெரும் திரைப்பட விழாவில், மாணவர்கள் முன்னிலையில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, தகுதி வாய்ந்த படைப்புகளைத் தேர்வு செய்து, படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த பாலன்  கலந்துகொண்டு படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

விருது பெற்றவர்கள்:-

1. P S வினோத் ராஜ் – சிறந்த இயக்குனர் – கூழாங்கல்

2. ரா. வெங்கட் – சிறந்த திரைப்படம் – கிடா

3. கார்த்திகா வைத்தியநாதன் – சிறந்த பாடகி – சித்தா (கண்கள் ஏதோ). –

4. தர்ஷன் – சிறந்த வில்லன் – சித்தா.

5. மகேந்திரன் கனேசன் – சிறந்த படத்தொகுப்பாளர் – யாத்திசை

6. இரஞ்சித் குமார் – சிறந்த கலை இயக்குனர் – யாத்திசை

7. மதன் – சிறந்த குணச்சித்திர நடிகர் – ரணம் அறம் தவறேல்

8.அம்மு அபிராமி – சிறந்த நடிகை – கண்ணகி

9. சேத்தன் – சிறந்த நடிகர் – விடுதலை பாகம் 1

10. பாக்கியம் ஷங்கர் – சிறந்த நடிகர் – துணைக்கதாப்பாத்திரம் மாடர்ன் லவ் சென்னை.

11. பிருத்வீராஜன் – சிறந்த குணச்சித்திர நடிகர் – புளூ ஸ்டார்

12. தமிழ் அழகன் – சிறந்த ஒளிப்பதிவாளர் – புளூ ஸ்டார்

13. Lights on Media – சிறந்த தயாரிப்பாளர் – பருந்தாகுது ஊர்க்குருவி

14. செல்வா – சிறந்த போஸ்டர் வடிவமைப்பாளர் – பிதா

சிறப்பான தமிழ்த் திரைப்படைப்புகளை மெய் குழு கண்டறிந்து அவர்களை அங்கீகரிப்பதன் நோக்கமாகவே இந்த விருது விழா துவங்கி நடத்தப்பட்டது. இன்றைய நிகழ்வில் மாணவர்களுக்குக் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this