Wednesday, April 24, 2024
spot_img
HomeCinemaசினிமா குறித்து எதுவும் தெரியாது; இப்போது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்! -'மங்கை' படத்தின் பாடல்கள் வெளியீட்டு...

சினிமா குறித்து எதுவும் தெரியாது; இப்போது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்! -‘மங்கை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நாயகி கயல் ஆனந்தி பேச்சு

Published on

‘கயல்’ ஆனந்தி நடிக்க, ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில்ம், குபேந்திரன் காமாட்சி இயக்கிய படம் ‘மங்கை.’ ஆனந்தி, துஷி, பிக் பாஸ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே.ஸ்டார், ஸ்டண்ட் இயக்குநர் ராம்குமார், படத்தொகுப்பாளர் பார்த்திபன், நடன இயக்குநர் ராதிகா, பாடகி சாக்ஷி, ‘கிடா’ பட இயக்குநர் ரா.வெங்கட், நடிகை பிக்பாஸ் ஷிவின், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட இயக்குநர் ரோஹந்த், நடிகர் ஆதித்யா கதிர், ‘மேற்குதொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின், நடிகர் துஷ்யந்த், இசையமைப்பாளர் தீசன், நடிகர் ஜெயப்பிரகாஷ், இயக்குநர் ஹலிதா சமீம், தயாரிப்பாளர் ஜாஃபர், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் துரை, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நடிகை ஆனந்தி பேசியபோது, ‘கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மங்கை’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். படம் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அவ்வளவு உழைத்திருக்கிறார்.

எக்ஸீகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் சார் எல்லா வேலைகளையும் எடுத்து செய்வார். எல்லாவித உதவிகளையும் எல்லோருக்கும் செய்பவர். அவருக்கு நன்றி. இன்றைய விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி. ஷிவின் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருக்கிறார். அது போல் துஷி எனக்கு நல்ல நண்பர். ஜே.பி சாரின் பையன் என்பதை எல்லாம் காட்டிக்கொண்டதே இல்லை.

நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பீர்கள். இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார்.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, இசையமைப்பாளர் தீசன் எப்போதுமே பாஸிட்டிவ் எனெர்ஜியுடன் இருப்பார். அவருக்கு மிக்க நன்றி. படப்பிடிப்புக்கு போகும் போது ஒரு பாடல் மட்டும்தான் இருந்தது. பின்னர் அது ஐந்து பாடல்களாக ஆனது. அதற்கு தீசனின் இசை ஒரு காரணம். பாடலாசிரியர்கள் கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா அனைவருக்கும் நன்றி.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜாஃபர் சார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டார் சார் அனைவருக்கும் நன்றி, படத்திற்கு பத்திரிகையாள்ர்களான் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Latest articles

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவில் ஜெய் ஹனுமான் படத்தின் போஸ்டர் வெளியீடு!

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடும் தருணத்தில் அந்த படத்தின் 2-ம் பாகமான ஜெய் ஹனுமான்...

அமீர் நடிக்க, ஆதம் பாவா இயக்கிய ‘உயிர் தமிழுக்கு’ மே 10-ம் தேதி ரிலீஸ்!

அமீர் கதாநாயகனாக நடிக்க, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள 'உயிர் தமிழுக்கு‘ படம் வரும் மே 10-ம் தேதி தியேட்டர்களில்...

More like this

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவில் ஜெய் ஹனுமான் படத்தின் போஸ்டர் வெளியீடு!

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடும் தருணத்தில் அந்த படத்தின் 2-ம் பாகமான ஜெய் ஹனுமான்...

அமீர் நடிக்க, ஆதம் பாவா இயக்கிய ‘உயிர் தமிழுக்கு’ மே 10-ம் தேதி ரிலீஸ்!

அமீர் கதாநாயகனாக நடிக்க, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள 'உயிர் தமிழுக்கு‘ படம் வரும் மே 10-ம் தேதி தியேட்டர்களில்...