HomeCinemaசர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க தயாராக, இடைத்தேர்தல் சதியில் பலிகடாவான இஸ்லாமிய குடும்பத்தை மையப்படுத்திய ‘மான்குர்த்.'

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க தயாராக, இடைத்தேர்தல் சதியில் பலிகடாவான இஸ்லாமிய குடும்பத்தை மையப்படுத்திய ‘மான்குர்த்.’

Published on

மும்பையை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில், விறுவிறுப்பான திரைக்கதையில் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்களிப்போடு சுயாதீன திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மான்குர்த்.’

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகெங்கும் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகியுள்ளது.

மதங்களை தாண்டிய மனிதநேயத்தை பேசும் இந்த படத்தின் காட்சிகள் மும்பையின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இரண்டு சாதாரண சிறுபான்மையினர் ஒரு அசாதாரண அரசியல் விளையாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இடைத்தேர்தலை முன்னிட்டு ஒரு அரசியல் கட்சி செய்யும் சதியில் முகமதும் அவரது மகள் நிஷாவும் பலிகடாவாகிறார்கள்.

என்ன செய்வது என்று அவர்கள் தவிக்கும் நிலையில், நல்லெண்ணம் கொண்ட தலைவர் ஒருவர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். வஞ்சகர்கள் வலையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதை பரபரப்பாக சொல்லும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ‘மேதகு’ புகழ் ராஜா, சௌந்தர்யா மனோகரன், சையத் பாஷா மற்றும் அல்கா சக்சேனா ஆகியோர் நடித்துள்ளனர். பாரதி கோலப்பன், எம்.ராஜா மற்றும் அம்மு பைரவி ஆகியோர் முக்கிய பங்களித்துள்ளனர். பன்முகத்தன்மை மிக்க ‘மான்குர்த்’ கதையில் தமிழ், இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழியினர் நடித்துள்ள நிலையில் பன்மொழித் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

பல்வேறு விருதுகளை பெற்ற குறும்படங்களை இயக்கியுள்ள பிரவீன் கிரி, இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் பணியாற்றி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ஹரிஷ் ராஹித்யா இசையமைத்துள்ளார். விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ரியன் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, ரிகேஷ் குமார் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

Latest articles

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் ரசிக்கும்படியான படம் என்று சொல்லலாம். அப்படியான சாகசங்கள் நிரம்பிய அனிமேஷன் ஃபேண்டஸி படம். லின்...

புதுச்சேரி முதலமைச்சரிடம் ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி!

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

More like this