HomeCinema'மாமன்னன்' வெற்றிக் கூட்டணி வடிவேலு _ பஹத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ரிலீஸ் எப்போது? புதிய...

‘மாமன்னன்’ வெற்றிக் கூட்டணி வடிவேலு _ பஹத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ரிலீஸ் எப்போது? புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு.

Published on

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனிடையே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98 ஆவது திரைப்படம் இது என்பதும், ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இது என்பதும் , இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படக்குழு: கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

Latest articles

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

‘கான் சிட்டி’ படத்திலிருந்து ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

https://www.youtube.com/watch?v=RMEyZXDQrCg பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி...

More like this