‘சித்தா’ படத்தின் மிப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சித்தார்த் நடித்துள்ள படம் ‘மிஸ் யூ.’
சித்தார்த் இந்த படத்தில் ‘நீ என்ன பாத்தியே’ என்ற பாடலையும் பாடியுள்ளார்
என் ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
விரைவில் வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை குன்றத்தூரிலுள்ள ‘சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ கல்லூரியில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தார்த், இயக்குநர் ராஜசேகர், பாடலாசிரியர் மோகன் ராஜன், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அங்கு கூடியிருந்த மாணவர்களிடம் உரையாடிய சித்தார்த், அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து, ‘மிஸ் யூ’ படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். மாணவர்களுடன் மிஸ் யூ படத்தின் பாடலுக்கு இணைந்து நடனமும் ஆடினார். இந்த படத்தில் தான் பாடிய ‘நீ என்ன பாத்தியே’ பாடலை வெளியிட்டதோடு பாடவும் செய்தார்.