HomeMovie Reviewலெக் பீஸ் சினிமா விமர்சனம்

லெக் பீஸ் சினிமா விமர்சனம்

Published on

கணக்கு வழக்கில்லாமல் காமெடி நடிகர்களை ஒன்றுதிரட்டி, அவர்களின் பங்களிப்பை உருப்படியாய் பயன்படுத்தி உருவாக்கிய ‘லெக் பீஸ்.’

தெருவில் அனாதையாய் கிடந்த 2000 ரூபாய் நோட்டுக்கு ஆதரவு கொடுக்கும் நான்கு இளைஞர்கள், அதை வைத்து குடித்து குதூகலமாகிறார்கள். அந்த நோட்டு கள்ள நோட்டாக இருக்க, அது பார் உரிமையாளருக்குத் தெரியவர அவர், நான்கு பேரையும் வெச்சு செய்யும் முடிவுக்கு வருகிறார். அந்த நேரமாகப் பார்த்து அவரை வெச்சு செய்ய சிலர் வருகிறார்கள். துப்பாக்கிச் சுடு நடக்கிறது. சிலர் உயிரை விடுகிறார்கள். கொலைப்பழி அங்கிருந்த நான்கு பேர் விழுந்தால்தானே கதை சூடு பிடிக்கும். அப்படியே நடக்கிறது.

வெயிட் வெயிட்… இதையெல்லாம் வைத்து படம் கிரைம் திரில்லர்ங்கிற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். கதையில் மிகப்பெரிய கிரைம் இருக்கிறதுதான்; அதற்கு காரணமானவர்கள் பழி வாங்கப்படுகிறார்கள்தான். ஆனால், அதையெல்லாம் தாண்டி வயிறு வலிக்க சிரிக்க வைப்பதுதான் இந்த லெக் பீஸின் ஸ்பெஷாலிடி…

கதையின் ஹீரோக்கள் பேய் முருகேசன் (ஸ்ரீநாத்), குயில் குமார் (இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன்), திடீர் திருப்பதி (கருணாகரன்), மிமிக்ரி கோபி (ரமேஷ் திலக்) என நான்கு பேர். ஒருவர் பேய் ஒட்டுபவராக, இன்னொருவர் கிளி ஜோசியம் பார்ப்பவராக, ஒருவர் பலகுரல் மன்னனாக இருந்து ஒவ்வொரு விதமாக சிரிப்பூட்ட, குயில் குமாராக வருகிறவர் தங்களை கள்ள நோட்டு விஷயத்தில் சிக்க வைத்தவரின் மனைவியை வளைத்துப் போடுவதெல்லாம் ரகளையாக கடந்துபோகும் காட்சிகள்.

ரவி மரியாவை மாணிக் பாஷா கெட்டப்பிலும், விடிவி கணேஷை காந்தாரா கெட்டப்பிலும் பார்க்கும்போது சிரிக்காமல் தவிர்க்க முடியாது.

தன் மனைவி மீது காமப் பார்வை பார்வை வீசுபவர்களை என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் புரியாமல் தவிக்கிற யோகிபாபு, யார் யாரையோ கொலைக் குற்றவாளிகள் என போலீஸுக்கு அடையாளம் காட்டி பேஷண்டாக மாறுவதை பார்த்து ரசிக்காமல் கடக்க முடியாது.

போலீஸாக ஜான் விஜய், பார் உரிமையாளராக மொட்டை ராஜேந்திரன் என மற்றவர்களின் செயல்பாடுகளும் அதற்கேற்ற நடிப்பும் கலகலப்புக்கு கேரண்டி தருபவை.

ஹீரோக்கள் நால்வரில் ஒருவராக வருகிற இயக்குநர் ஸ்ரீநாத் சிரிக்கவும் வைக்கிறார்; தன் முன் கதையைச் சொல்லி தங்கையின் இழப்பை விவரிக்கிறபோது மனதை ரணமாக்கவும் செய்கிறார்.

பிஜோர்ன் சுர்ரா இசையில் டி ராஜேந்தர் குரலில் ஒன்று, அனிருத் குரலில் இன்னொன்று என இரு பாடல்கள் ரசிகர்களை உற்சாக மோடுக்கு கொண்டு செல்கின்றன.

ஒளிப்பதிவு தரம்; எடிட்டிங் நேர்த்தி.

கிரைம் கதைதான் என்றாலும் அதை மனம் திறந்து சிரிக்க வைக்கும் திரைக்கதையால் நிரப்பி சிரிப்பு விருந்து படைத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீகாந்தை பாராட்டி லெக் பீஸோடு பிரியாணி விருந்து வைக்கலாம்.

லெக் பீஸ் _ காமெடி காக்டெயில்!

Rating 3.5 / 5 

Latest articles

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

‘கான் சிட்டி’ படத்திலிருந்து ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

https://www.youtube.com/watch?v=RMEyZXDQrCg பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி...

More like this

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...