HomeCinemaலீடர் சினிமா விமர்சனம்

லீடர் சினிமா விமர்சனம்

Published on

முதல் பட நடிப்பு பெற்றுக் கொடுத்த விமர்சனங்களை, கிண்டல் கேலிகளை மனதில் வைத்துக் கொண்டு, இதை செய்யலாம் அதை செய்யலாம், இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது என்கிற தெளிவுக்கு வந்து, தன்னை தயார்படுத்திக் கொண்டு லீடராகியிருக்கிறார் லெஜன்ட் சரவணன்.

சக்திவேல் என்ற கேரக்டரில் ஆரம்பக் காட்சிகளில் எளிமையான கார் மெக்கானிக்காக வருகிற லெஜன்ட் சரவணன், தனது சில தூணிச்சலான செயல்களால் சர்வதேச பயங்கரவாதி ஒருவருக்கு எதிரியாகிறார். அந்த பயங்கரவாதி சரவணனை கொன்று தீர்க்க திட்டமிடுகிறார். என்ன செய்தாலும் சரவணனை எதுவும் செய்ய முடியவில்லை.

சாதாரண கார் மெக்கானிக் சர்வதேச பயங்கரவாதியை எதிர்க்க முடிகிறது என்றால், தமிழ் சினிமா ஃபார்முலா படி கண்டிப்பாக அவருக்கு ஒரு அதிரடியான ஃபிளாஷ்பேக் இருக்கும். அதன்படியே இருக்கிறது… அந்த பிளாஷ்பேக் முழுக்க பயங்கரவாதிகளை சுளுக்கெடுக்கும் உளவாளிப் படை வீரராக ஆக்சனில் தெறிக்க விட்டிருக்கிறார். நிகழ்காலக் கதையிலும் ஆக்சன் அதிரடியும் அசத்தலான சாகசங்களும் உண்டு. காதலன், கணவன், ஒரு குழந்தைக்கு தந்தை என உணர்வுபூர்வமாக நடிக்கவும் வாய்ப்பு அதிகம். குறை சொல்ல இடம் தராதபடி நடித்திருக்கிறார்.

சரவணனின் காதலியாகவும் மனைவியாகவும் எதார்த்தம் மீறாமல் நடித்து மனதில் இடம் பிடிக்கிறார் பாயல் ராஜ்புத்.

ஷாமும், ஆன்ட்ரியாவும் காவல்துறை உயரதிகாரிகளாக வந்து நேர்மையின் பக்கம் நிற்கிறார்கள். ஒரே கெட்டப்பில் ஒன்றாக, இரண்டாக, மூன்றாக என வந்து பயங்கரவாதிக்கான முகத்தை மிரட்டலாக காண்பித்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப்.

லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், ஜார்ஜ் மரியன், ஐஸ்வர்யா பாஸ்கரன், படவா கோபி, அசோக் பாண்டியன், சோபன்பாபு, குமார் நடராஜன், விஜயலட்சுமி என பலரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

படத்தை வைத்தகண் வைத்தபடி அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் கதை என ஒன்று இருக்கிறது; திரைக்கதை மாஸ் ஹீரோக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக இருக்கிறது; திருப்பங்கள் எதிர்பாராததாக இருக்கிறது; நடித்திருப்பவர்களின் பங்களிப்பு அளவாக அழகாக இருக்கிறது; ஜிப்ரானின் இசை காட்சிகளுக்கு சுறுசுறுப்பு தரும்படி இருக்கிறது; கதையின் நாயகனான நடித்திருகிருக்கும் சரவணன் படம் பிரமாண்டமாக உருவாக பணத்தை தாராளமாக செலவு செய்திருக்கிறார்; பிரமாண்டமான படத்தை தனது ஒளிப்பதிவால் கூடுதல் பிரமாண்டமாக்கியிருக்கிறார் வெங்கடேஷ் எஸ்…

லாஜிக் கேள்விகளை தூக்கிப் போட்டுவிட்டுப் பார்த்தால் ஆக்சனில் பட்டாசாக, சென்டிமென்ட்டில் மனதைக் கவர்கிற இந்த லீடர் நம்பிப் போகிறவர்களை டிஸப்பாயிண்ட்மென்ட் மூடுக்கு கொண்டு போக மாட்டார் என்பது கேரண்டி.

Rating 3.5 / 5

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...