HomeCinemaநடிகர் ஜெய் ‘லேபில்' வெப் சீரிஸுக்காக கூடுதலாக உழைத்தார்! -இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பெருமிதம்

நடிகர் ஜெய் ‘லேபில்’ வெப் சீரிஸுக்காக கூடுதலாக உழைத்தார்! -இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பெருமிதம்

Published on

ஜெய், தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள ‘லேபில்’ வெப் சீரிஸில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 10, 2023 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு ‘லேபில்’ வெப் சீரிஸின் நான்கு எபிசோடுகள் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், ‘‘லேபில் என் மூன்றாவது படைப்பு. ஒவ்வொன்றிலும் புதுப்புது விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவரும் என்னை மிகவும் நம்பினார்கள். எல்லோரும் சினிமாவில் சாதித்தவர்கள். இந்த சீரிஸ் நன்றாக உருவாக காரணம், என் டைரக்சன் டீம் தான். ஜெய் இந்த படைப்பின் மூலம் நண்பராகக் கிடைத்துள்ளார். அவரை இயக்கும்போது எனக்காகக் கூடுதலாக உழைத்தார். இந்த சீரிஸ் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ஜெய், ‘‘பொதுவாக படவிழாக்களை டீவியில் பார்க்கும்போது, படம் பற்றி எல்லோரும் பேசுவதைப் பார்த்தால், கொஞ்சம் ஓவராக பேசுவதாக தோன்றும். ஆனால், நாங்கள் இது தரமான படைப்பு என்று சொல்வது சரியாதனாவே இருக்கும். எனக்கு மிக மிக முக்கியமான படைப்பு. எல்லோரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

இந்த சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளது. யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளனர்.

சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this