Monday, April 21, 2025
spot_img
HomeCinema‘கிடா' சினிமா விமர்சனம்

‘கிடா’ சினிமா விமர்சனம்

Published on

நம்மூரில் இப்போதும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்’ என்பதை மயிலிறகால் வருடுவது போன்ற கதைமூலம் எடுத்துச் சொல்லியிருக்கும் படம்.

வறுமைச் சூழலில் வாழ்கிற முதியவர் செல்லையா. அவர், தன் பேரன் தீபாவளியன்று அணிந்துகொள்ள அவன் ஆசைப்பட்ட ஆடையை வாங்கித் தர நினைக்கிறார். அதற்காக பணம் புரட்ட முயற்சிக்கிறார். யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில் சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா’வை விற்கும் முடிவுக்கு வந்து அட்வான்ஸ் தொகையும் பெறுகிறார். அந்த சந்தர்ப்பமாக பார்த்து கிடாவை களவாணிகள் திருடிக்கொண்டு போய்விட, விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் தவித்துப் போகிறார் செல்லையா.

படு பிஸியாக இருக்கும் அந்த கசாப்புக் கடையில் கறி வெட்டும் பணியிலிருப்பவர் வெள்ளைச் சாமி. அவர் குடித்து விட்டு தாமதமாக வேலைக்குப் போவதை வழக்கமாக வைத்திருக்க, அதை காரணமாக காட்டி தீபாவளிக்கு ஒருசில தினங்கள் முன் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். அந்த நிலையில் வேலையை விட்டு நீக்கியவரிடம் ‘தீபாவளியன்று சொந்தமாக கறிக்கடை போட்டுக் காட்டுகிறேன்’ என சவால் விடுகிறார். ஆனால், அவர் நினைத்தபடி கறிக்கடை போட ஆடு வாங்க பணமில்லாத நிலை. யாரும் உதவ முன்வராத பரிதாபச் சூழலுக்கு தள்ளப்படுகிறார்.

இந்த இரு தரப்பும் ஒரே புள்ளியில் இணைந்து பயணிப்பதே கதையின் போக்கு… செல்லையா நினைத்தபடி தன் பேரனுக்கு துணி வாங்க முடிந்ததா? வெள்ளைச் சாமி சவால் விட்டபடி கறிக்கடை போட முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு திரைக்கதை பதில் சொல்கிறது. இயக்கம் ரா. வெங்கட்

வறுமை, இயலாமை, கோபம், நினைத்தது நடக்காத விரக்தி, பேரன் மீது அளவுகடந்த பாசம் என செல்லையாவாக பரிபூரணமாக வாழ்ந்திருக்கிறார் ‘பூ’ ராமு.

வெள்ளைச் சாமியாக காளி வெங்கட். குடி போதையில் மிதப்பது, அது தவறென உணர்ந்து நல்வழிக்கு மாறுவது, ஆடு வாங்க அலைந்து திரிந்து எவரும் உதவாத நிலையில் மனம் உடைவது, மகனுடைய காதலுக்கு ஆதரவாக நிற்பது என படம் முழுக்க இயல்பான, யதார்த்தமான நடிப்பால் கட்டிப் போடுகிறார்.

கணவன் மனம் நொறுங்கி நிற்கும்போது சாமி உண்டியலிலிருந்து சிறு தொகையை எடுத்துக் கொடுத்து கறிக்கடை போட ஊக்குவிக்கும் காட்சிகளில் காளி வெங்கட்டின் மனைவியாக வருகிற விஜயாவின் நடிப்பு தனித்து தெரிகிறது. அப்படியான மனைவிகள் வாய்த்தால் எந்த கணவனும் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் வந்துபோகிறது.

தாத்தாவின் மீது பிரியம், கிடா’ மீது நேசம் என சிறுவன் தீபனிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் நடிப்பில் அத்தனை உயிரோட்டம்!

பூ ராமுவின் மனைவியாக வருகிற பாண்டியம்மா, திருடர்களாக வருகிற இளைஞர்கள் என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களும் கதைக்குத் தேவையான நடிப்பை நிறைவாக தந்திருக்கிறார்கள்.

கதையின் ஒரு பகுதியாக வரும் இளம் காதல் ஜோடியும் அவர்களின் காதலும் மனதுக்கு இதம் தருகிறது.

உணர்வுபூர்வமான கதைக்களத்தின் நீள அகலம் உணர்ந்து பாடல்களையும் பின்னணி இசையையும் தந்திருக்கிறார் தீசன்.

எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு அத்தனை காட்சிகளையும் உயிர்ப்புடன் நகர்த்தியிருக்கிறது.

வெளியாவதற்கு முன்பே பல்வேறு உயரிய அங்கீகாரங்களையும் உயரிய விருதுகளையும் குவித்த இந்த படத்தில் வரும் ஒருசில சம்பவங்களை நம் வாழ்நாளில் சந்திக்காமல் கடந்திருக்க முடியாது.

தீபாவளியை மையப்படுத்திய இந்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் வெளியாவது மிகமிக பொருத்தம்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
நம்மூரில் இப்போதும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்' என்பதை மயிலிறகால் வருடுவது போன்ற கதைமூலம் எடுத்துச் சொல்லியிருக்கும் படம். வறுமைச் சூழலில் வாழ்கிற முதியவர் செல்லையா. அவர், தன் பேரன் தீபாவளியன்று அணிந்துகொள்ள அவன் ஆசைப்பட்ட ஆடையை வாங்கித் தர நினைக்கிறார். அதற்காக பணம் புரட்ட முயற்சிக்கிறார். யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில் சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா'வை விற்கும் முடிவுக்கு வந்து அட்வான்ஸ்...‘கிடா' சினிமா விமர்சனம்
error: Content is protected !!