Wednesday, March 11, 2026
spot_img
HomeCinemaபடப்பிடிப்பை நிறைவுசெய்து, கேக் வெட்டி உற்சாகமான 'காதலே காதலே' படக்குழு!

படப்பிடிப்பை நிறைவுசெய்து, கேக் வெட்டி உற்சாகமான ‘காதலே காதலே’ படக்குழு!

Published on

மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘காதலே காதலே.’

ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் இந்தப் படம் சரியாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக படப்பிடிப்பு முடித்துள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என உறுதியளிக்கிறது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ஜோ’ மற்றும் நம் இதயங்களை வென்ற மற்ற காதல் எண்டர்டெயினர் படங்களைப் போலவே உங்கள் மனதைக் கவரும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக ‘காதலே காதலே’ இருக்கும் என நம்பலாம்.

பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு ரசனையான பொழுதுபோக்கு படங்களைத் தயாரித்து வழங்குகிற ஸ்ரீவாரி ஃபிலிம் பி.ரங்கநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார். அவரிடம் படம் பற்றி கேட்டபோது, “ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது சரியான குழு மற்றும் திட்டமிடல் மூலம் முழுமையடைகிறது என்று நம்புகிறேன். ‘காதலே காதலே’ படத்தின் மொத்தக் குழுவினரும், ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி, ஒரே ஸ்ட்ரெச் ஷெட்யூலில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளராக என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

ஒரு இயக்குநரின் திறமை சிறந்த படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் அனைத்தையும் திறமையாக நிர்வகிப்பது மற்றும் திட்டமிட்டபடி அனைத்தையும் முழுமையாக செய்வதும்தான். இயக்குநர் பிரேம்நாத் இந்தத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மஹத் ராகவேந்திரா திறமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மீனாட்சி கோவிந்தராஜன் இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த வரப்பிரசாதம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதியை அறிவிப்போம்” என்றார்.

‘காதலே காதலே’ திரைப்படத்தின் மேஜிக்கல் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

படக்குழு: ‘சீதா ராமம்’ படப்புகழ் விஷால் சந்திரசேகர் படத்திற்கு இசையமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எஸ். சாகு தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துக்கொள்கிறார். தியாகு இந்தப் படத்தின் எடிட்டர்.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!