Tuesday, June 18, 2024
spot_img
HomeCinemaமஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில்...

மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்பு!

Published on

மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமான்ஸ் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா.’

பிரபுராம்.செ இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆதித்யா கதிர், தங்கதுரை, கூல் சுரேஷ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மஹத் வடசென்னையைச் சேர்ந்த ஃப்ரீவீலிங் இளைஞனான நடித்துள்ளார். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவராக ஐஸ்வர்யா நடித்துள்ளார். மஹத் வடசென்னைவாசியாக நடித்திருப்பது கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. மஹத், ஐஸ்வர்யா தத்தா இருவரின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்கள் மனதைக் கவரும்.

படத்தில் வில்லனாக வருகிற ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டைக் காட்சிகள் கவனம் ஈர்க்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அவருக்கான சண்டைக் காட்சிகளை தங்கலான்’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும்.

பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.

மஹத், ஐஸ்வர்யா தத்தா ரொமான்ஸ் பாடல் நித்யஸ்ரீயின் குரலில் தரண் இசையில், கு. கார்த்திக் வரிகளில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யோகிபாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளது.

இளமைத் துள்ளலோடு, நகர்ப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின், டிரெய்லர் வெளியீட்டு விழா பெரியதிரை, சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:-
தயாரிப்பு: வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் ஃபேவின்ஸ் பால்
ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்
பாடல் வரிகள்: லோகன் கு கார்த்திக்
படத்தொகுப்பு: பி. பிரவின் பாஸ்கர்
கலை: கிஷோர்
ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம்
நடனம்: சசிகுமார்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Latest articles

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் ‘பருவு’ சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

சாதிப்பாகுபாடு, கவுரவக் கொலை... நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ZEE5 'பருவு' சீரிஸில் பரபரப்பான திருப்பங்கள்! நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா,...

பிரபாஸ் ரசிகர்களை உற்சாகமாக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்திலின் ‘பைரவா ஆன்தம்.’

பெரும் காத்திருப்பிற்கு பிறகு 'கல்கி 2898 கி.பி' படத்திலிருந்து 'பைரவா ஆன்தம்' பாடலை வெளியாகியுள்ளது. உலகளாவிய பிரபலங்களாக திகழும்...

ஆஹா ஓடிடி தளத்தின் ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரீஸ் 2 பூஜையுடன் துவக்கம்!

தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த, பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக...

‘தியா’ பிருத்வி அம்பர், ‘ரதாவரா’ இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் உருவாகும் ‘சௌகிதார்.’ அறிவிப்பை வெளியிட்டார் ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி!

'தியா' புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் 'ரதாவரா' படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும்...

More like this