HomeMovie Reviewகுற்றம் புதிது சினிமா விமர்சனம்

குற்றம் புதிது சினிமா விமர்சனம்

Published on

கிரைம் திரில்லர் படங்களின் வரிசையில் மற்றுமொரு வரவாக ‘குற்றம் புதிது.’

கதாநாயகி காணாமல் போகிறாள். கதாநாயகன் அவளை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸில் சொல்கிறான். அவளை மட்டுமல்லாது இன்னும் இரண்டு கொலைகளையும் செய்ததாக சொல்லும்போது கதையில் பரபரப்பு எகிறுகிறது.

எதற்காக அந்த கொலைகள் என்பதை அலசி ஆராய்கிறபோது அதிரவைக்கும் சம்பவமொன்று நடந்ததை இடைவேளைக்குப் பின் காண்பித்து இதுதான் குற்றம் புதிது’ என்று கதையை முடிக்கிறார் இயக்குநர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்க்.

நாயகன் தருண் விஜய் நடிப்புக்கு புதியவர். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போன்ற முகபாவத்துடன் செய்த கொலைகள் பற்றி விளக்கும்போது கவனம் ஈர்க்கிறார். கொலை செய்த உடலை துண்டு போடுவதில் காட்டும் வெறித்தனம், காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதம் என மற்ற காட்சிகளில் ஓகே ரக நடிப்பைத் தந்திருக்கிறார்.

நாயகி ஜேஷ்விதா கனிமொழி, தன்மீது நடந்த பாலியல் அத்துமீறலுக்கு பழிவாங்கும் விதமாக நடந்துகொண்ட காதலனுடன் இணைந்து குற்றச் சம்பவத்தை மறைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் காட்டும் பரபரப்பான உடல்மொழியால் கவனம் ஈர்க்கிறார்.

பாலியல் வன்முறைக்குத் தேவையான வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிற ராம்ஸ், போலீஸ் உயரதிகாரியாக வருகிற மதுசூதன் காட்டியிருக்கிற கம்பீரம், மற்றவர்கள் வழங்கியிருக்கிற கச்சிதமான நடிப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

ஜேஷன் வில்லியம்ஸ் நேர்த்தியான ஒளிப்பதிவால் படத்தை தரம் உயர்த்த, பின்னணி இசையால் காட்சிகளை விறுவிறுப்பாக்க முயற்சித்திருக்கிறார் கரண் பி கிருபா.

இயக்குநர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்க் இடைவேளை வரை உருவாக்கிய எதிர்பார்ப்பை அதன் பிறகான காட்சிகளில் தக்க வைக்க முடியாமல் தடுமாறியிருப்பதால், குற்றம் புதிது வழக்கமான கிரைம் கதைகளில் ஒன்றாக ஓடி முடிகிறது.

Rating 3 / 5

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this