HomeCinemaதுல்கர் சல்மானின் 'காந்தா'வில் பாக்கியஸ்ரீ போர்சே இப்படித்தான் இருப்பார்... கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டது படக்குழு!

துல்கர் சல்மானின் ‘காந்தா’வில் பாக்கியஸ்ரீ போர்சே இப்படித்தான் இருப்பார்… கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டது படக்குழு!

Published on

‘காந்தா’ படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள இருவரின் முதல் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில், படக்குழு நடிகர் சமுத்திரக்கனியின் பவர்ஃபுல்லான கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டது.

இன்று படக்குழு அழகு மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் திறமையான நடிகை பாக்கியஸ்ரீ போர்சேவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வசீகரிக்கும் புன்னகையுடன் கார் ஜன்னலை எட்டிப்பார்த்தபடி அவர் அந்த போஸ்டரில் இருக்கிறார். அவரது வசீகரிக்கும் பார்வை கவிதைத்துவமாக அமைந்துள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கும் இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது.

1950களின் மெட்ராஸின் பரபரப்பான தெருக்களோடு செட் அமைக்கப்பட்டு ‘காந்தா’ படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ராணா டகுபதி தலைமையிலான ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

Latest articles

‘டீகன்ஸ்ட்ரக்ட்’ (Deconstruct) நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னர் ராக் ஸ்டார் அனிருத்!  

'டீகன்ஸ்ட்ரக்ட்' இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது. இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை. நவீன...

தண்ணீருக்கடியில் 20 அடி ஆழத்தில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா… ‘மிஸ்டர் X’ படத்தில் அதிரடி காட்சி!

நடிகர் ஆர்யா 'மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்தியிருக்கிறார். இதுபற்றி...

வீர அன்பரசு நடித்து இயக்கியுள்ள ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்! 

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.'...

அஜித் – ஷாலினி நடித்த கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ்!

அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று...

More like this