HomeCinemaகாமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -'கொஞ்சநாள்...

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

Published on

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் விக்னேஷ் பாண்டியன், ”என்னை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் முருகன் சாருக்கு என் நன்றி. ஒரு நாள் கூட அவர் ஷூட்டிங் வந்ததே இல்லை, முழுமையாக என்னை நம்பி, நான் கேட்ட அனைத்தையும் தந்தார். இப்படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல படம் தந்துள்ளோம். பத்திரிக்கை மீடியா நண்பர்கள் எங்கள் படத்திற்கு முழு ஆதரவைத் தர வேண்டும்” என்றார்.

நாயகன் நிஷாந்த், ”இந்த வருடம் மிகுந்த ஆசிர்வாதமாக அமைந்துள்ளது. எனது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. கொஞ்ச நாள் பொறு தலைவா மிக நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர் யாருக்கும் எந்தக் குறையும் வைக்காமல், மிக பொறுப்புடன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் மிக அட்டகாசமாகப் படத்தை உருவாக்கியுள்ளார்” என்றார்.

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில் பேசிய கலியமூர்த்தி, ”ஆரூத்ரன் நிறுவனம் 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது, அதன் அடுத்த கட்டமாகத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து உள்ளோம். எப்போதும் காமெடி படத்திற்குத் தனி வரவேற்பு உண்டு. மக்களுக்குப் பிடிக்கும் வகையில் அருமையான காமெடி படம் எடுத்துள்ள விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் ஹர்ஷத், நடிகர் அஷ்வின், இசையமைப்பாளர் சமந்த் நாக், டிரெய்லர் இசையமைப்பாளர் ஷாஜகான், பாடலாசிரியர் அஸ்மின், நடிகர் அஷ்வின், நடன இயக்குநர் சபரீஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

படம் பற்றி…

‘வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது’ என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன் காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...