Wednesday, March 11, 2026
spot_img
HomeCinema'குட் நைட்’, ’லவ்வர்’ ஹிட் பட நாயகன் மணிகண்டனின் அடுத்த படம் 'குடும்பஸ்தன்' விரைவில் ரிலீஸ்!

‘குட் நைட்’, ’லவ்வர்’ ஹிட் பட நாயகன் மணிகண்டனின் அடுத்த படம் ‘குடும்பஸ்தன்’ விரைவில் ரிலீஸ்!

Published on

’குட் நைட்’, ’லவ்வர்’ என பெரியளவில் வெற்றிபெற்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிற நடிகர் மணிகண்டனின் அடுத்த படம் ‘குடும்பஸ்தன்.’

படத்தில் சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ’ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் கனகம்மா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ், புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறைந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே. அந்த அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியுடன் மணிகண்டன் மீண்டும் இணைந்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் ராஜேஷ்வர் “கோயம்புத்தூரில் இருக்கும் புதிதாக திருமணமான தம்பதிகள் பற்றிய மகிழ்வான கதை இது. ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள், சாகசங்களை மையமாக வைத்து  இயல்பான வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான படைப்பாக உருவாகியிருக்கிறது” என்றார்.

படம் விரைவில் வெளியாகவுள்ளது.

படக் குழு:
இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி
கதை: பிரசன்னா பாலச்சந்திரன், ராஜேஷ்வர் காளிசாமி
திரைக்கதை, வசனம்: பிரசன்னா பாலசந்திரன்
தயாரிப்பு: எஸ்.வினோத் குமார்
தயாரிப்பு நிறுவனம்: சினிமாகாரன்
ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்
இசை: வைஷாக் பாபுராஜ்
எடிட்டிங்: கண்ணன் பாலு
கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி
ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு: மீரா
விளம்பர வடிவமைப்பு: வின்சிராஜ்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!