HomeCinemaட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்கும் டாணாக்காரன் தமிழ்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்கும் டாணாக்காரன் தமிழ்!

Published on

தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, ஒக்கே ஒக்க ஜீவிதம், ஃபர்ஹானா போன்ற அழுத்தமான படைப்புகளை, பெரிய திரையில் எந்த சமரசமும் இல்லாமல் தயாரித்து வெளியிட்ட, சிறப்பு மிகு தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது இந்நிறுவனம், படத்திற்குப் படம் வித்தியாசமான காதாப்பாத்திரங்களில், முற்றிலும் வேறுபட்ட களங்களில், வெற்றிப்படங்களைத் தந்து வரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தியுடன் மீண்டும் கைகோர்க்கிறது.

முன்னதாக கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற கிளாசிக் பிளாக்பஸ்டர் படங்களையும், காஷ்மோரா மற்றும் ஜப்பான் போன்ற மாறுபட்ட சோதனை முயற்சிகளையும் வழங்கியுள்ளனர்.

தற்போது, கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணையும் அடுத்த படமான Karthi29 படத்தினை, இயக்குநர் தமிழ் இயக்குகிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விமர்சன ரீதியாக, பெரும் பாராட்டுக்களைக் குவித்த, ‘டாணாக்காரன்’ மூலம் இயக்குநராக தமிழ் அறிமுகமானவர். இத்திரைப்படம் நேரடி டிஜிட்டல் வெளியீடாக வெளியான போதிலும், முன்னணி விமர்சகர்களிடமிருந்து, பெரும் பாராட்டுக்களைப் பெற்றதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் குவித்தது குறிப்பிடதக்கது.

இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக, பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

இந்த பிரமாண்ட திரைப்படத்தினை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்ரமணியன் தலைமையிலான ‘ஐவிஓய்’  என்டர்டெயின்மென்ட் மற்றும் ’பி ஃபோர் யு’ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தயாரிப்பாளர்கள் தற்போது தொடங்கியுள்ளனர். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

இயக்குநர் பாபு விஜய் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் நடிகர் ஜெய் பேச்சு

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை.' இயக்குநர்...

நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால், நடிகர் சங்கத்தை வழி நடத்தும் பெரும் பணியை...

More like this