HomeCinemaகர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 'காமராஜ்' ஜூலை 21-ல் ரீ ரிலீஸ்!

கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘காமராஜ்’ ஜூலை 21-ல் ரீ ரிலீஸ்!

Published on

கர்ம வீரர், பெருந்தலைவர் என்றெல்லாம் போற்றப்பட்ட காமராஜரின் வாழ்க்கை வரலாறு ‘காமராஜ்’ என்ற பெயரில் தயாராகி, கடந்த 2004-ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. பத்திரிகை ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப் படமானது. அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த திரைப் படத்திற்கான சிறப்பு விருதையும் வென்றது.

செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை எழுத, படத்தை ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கி, ரமணா கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். படத்தில் ‘காமராஜ்’ படத்தில் காமராஜரைப் போன்று உருவ ஒற்றுமையுள்ள ரிச்சர்ட் மதுரம் காமஜராக நடித்திருந்தார். அவருக்கு எம்.எஸ். பாஸ்கர் பின்னணி குரல் கொடுக்க, படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் காமராஜரைப் போன்று உடல் ஒற்றுமையுள்ள ரிச்சர்ட் மதுரம் காமஜராக நடித்துள்ளார். காமராஜரின் குரலை நினைவுறுத்தும் விதமாக எம்.எஸ். பாஸ்கர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை எழுதியுள்ளார்.

அதோடு இன்றளவும், சில முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போது, காமராஜ் திரைப்படத்தின் காட்சிகள் விமர்சனக் கணைகளாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

‘காமராஜ்’ திரைப்படம் வெளியானபோது பிறந்திராத புதிய தலைமுறையினர் தற்போது வாக்களிக்கும் உரிமையைப் பெற்று விட்டனர். அறம் சார்ந்த அரசியலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தை இந்த புதிய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளது ரமணா கம்யூனிகேஷன். அதையடுத்து பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு ‘காமராஜ்’ திரைப்படம் தமிழகமெங்கும் ஜூலை 21ம் தேதி மறுதிரையிடல் செய்யப்படுகிறது.

Latest articles

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின்...

More like this