Friday, March 28, 2025
spot_img
HomeMovie Review‘ஜெய் விஜயம்' சினிமா விமர்சனம்

‘ஜெய் விஜயம்’ சினிமா விமர்சனம்

Published on

பொய் மனிதர்களிடம் சிக்கிய இளைஞனை சுற்றிச்சுழலும் ‘ஜெய் விஜயம்.’

அப்பா, மனைவி, தங்கையின் அரவணைப்பில் வசித்துவரும் ஜெய்,

அந்த ‘அப்பா, மனைவி, தங்கை மூவரும் என் உறவினர்கள் இல்லை; என்னை மறதிக்காரன் என சொல்லி நம்பவைத்து என்னிடமிருந்து எதையே பறிக்க திட்டமிடுகிறார்கள்’ என போலீஸில் புகார் கொடுக்கிறான்.

அந்த புகார் மீதான விசாரணையில், அவனைப் பார்த்து ‘நீ போலீஸால் பல வருட காலமாய் தேடப்படுகிற குற்றவாளி’ என்று சொல்லி அதிர வைக்கிறார்கள். அவன் அந்த கொலையை தான் செய்திருக்க வாய்ப்பேயில்லை என மறுக்கிறான்.

போலீஸ் சொல்வது உண்மையா? அவன் சொல்வது உண்மையா? தெரிந்துகொள்வதற்காக ஃபிளாஷ்பேக் போனால், பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சம்பவங்களும் காட்சிகளாக விரிகின்றன… அதில் ‘அட’ என்று வியக்கும்படியான அம்சங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இயக்கம் ஜெயசதீஷன் நாகேஸ்வரன் 

தான் வாழ்வது யாருடன், தனக்கு உண்மையிலேயே ஞாபக மறதி வியாதி இருக்கிறதா, தன் மீதான கொலைக் குற்றம் எந்தளவு உண்மை என படத்தின் இடைவேளை வரை குழம்பித் தவிப்பதில் அப்பாவித் தனத்தையும், பின்னர் சுதாரித்து தன்னை நிரபராதி என நிரூபிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் புத்திசாலித்தனத்தையும் சரிவிகிதத்தில் கலந்து தந்து கவனிக்க வைக்கிறார் ஜெய் ஆகாஷ். மின்னல் போல் மிகச்சில நிமிடங்களே வந்துபோகும் சண்டைக் காட்சிகளில் இடி இடிப்பதுபோல் ஆக்ரோசம் காட்டியிருக்கிறார்.

நல்லெண்ணத்தில் ஜெய்க்கு மனைவியாக நடிக்க ஒத்துக்கொண்டு அதனால் கிளுகிளுப்பான தருணங்களை சந்திக்கும்போது அசத்தலான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் அக்ஷயா கண்டமுதன்.

ஜெய் ஆகாஷின் தங்கை, உண்மையான மனைவி, காவல்துறை அதிகாரி என இடையிடையே வந்துபோகிறவர்கள் தந்துபோகிற பங்களிப்பு பக்கா.

சதிகாரர்களால் இறந்துபோன பெண்ணொருவரின் ஆத்மா படத்தின் முக்கிய கதாபாத்திரமாக ‘புகை‘ந்து கொண்டிருப்பது தனித்துவம்.

இதமான இசையால் ‘மண்மீது வந்த பெண் தேவதை’ பாடலுக்கு குளிர்ச்சி தந்திருக்கும் சதீஷ்குமார், பிளாஷ்பேக் காட்சிகளை அதிரடி இசையால் அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் என மற்ற துறையினரின் உழைப்பு படத்திற்கு பலம்.

பெரிய நடிகர்களின் பங்களிப்பு, பிரமாண்டம் என எதுவுமில்லாத, சற்றே வித்தியாசமான, எளிமையான சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் உங்களுக்குப் பிடிக்குமென்றால் ‘ஏ கியூப் ஆப்’பில் வெளியாகியிருக்கிற ‘ஜெய் விஜயம்’ ஏமாற்றம் தராது!

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....
பொய் மனிதர்களிடம் சிக்கிய இளைஞனை சுற்றிச்சுழலும் ‘ஜெய் விஜயம்.' அப்பா, மனைவி, தங்கையின் அரவணைப்பில் வசித்துவரும் ஜெய், அந்த 'அப்பா, மனைவி, தங்கை மூவரும் என் உறவினர்கள் இல்லை; என்னை மறதிக்காரன் என சொல்லி நம்பவைத்து என்னிடமிருந்து எதையே பறிக்க திட்டமிடுகிறார்கள்' என போலீஸில் புகார் கொடுக்கிறான். அந்த புகார் மீதான விசாரணையில், அவனைப் பார்த்து 'நீ போலீஸால் பல வருட காலமாய் தேடப்படுகிற குற்றவாளி'...‘ஜெய் விஜயம்' சினிமா விமர்சனம்