ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினத்தன்று பிரபல பேச்சாளர் மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
மனிதனின் மதிப்பை உயர்த்துவது கல்விச்செல்வமா, பொருட்செல்வமா என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
மனிதனின் மதிப்பை கல்விச்செல்வமே உயர்த்துகிறது என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், செல்வி.ஹேமவர்த்தினி ஆகியோரும், பொருட்செல்வமே என்ற அணியில் திரு.தாமல் சரவணன், திருமதி.அட்சயா, திரு.காளிதாஸ் ஆகியோரும் பங்கேற்று மிகச்சிறப்பான முறையில் தங்கள் கருத்துக்களை எடுத்துவைக்கின்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவுப்பகுதியில் இரு தரப்பு வாதங்களை சீர்தூக்கி, பகுப்பாய்ந்து, சில அரிய நூல்களை அறிமுகம் செய்தும், மேற்கொள் காட்டியும் அற்புதமான தீர்ப்பை நிகழ்ச்சியின் நடுவர் மணிகண்டன் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சி ஆயுத பூஜை நாளான அக்டோபர் 23ம் தேதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.