Tuesday, October 8, 2024
spot_img
HomeCinemaகன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஜாவா படத்தை இயக்கும் ரவி அரசு!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஜாவா படத்தை இயக்கும் ரவி அரசு!

Published on

மாநில எல்லைகளைக் கடந்து அனைத்து ரசிகர்களின் இதயங்களைக் கவர ஒரு சில நடிகர்களால் மட்டுமே முடியும். அதில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் ஒருவர். பல ஆண்டுகளாக, தமிழ் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். அவரது கன்னட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் அவரது திரை இருப்பு மற்றும் ஸ்டைலான ஸ்வாக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நடிகர் சிவராஜ்குமார் ‘ஜாவா’ படத்தின் மூலம் தமிழில் நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் ரவி அரசு பேசும்போது, “உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சிவராஜ்குமார் போன்ற ஒரு நட்சத்திரத்தை இயக்குவது எனக்கு கிடைத்த பெருமை. இது ஒரு அவுட்-அண்ட்-அவுட் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாக்குகிறோம். அவரது ரசிகர்களை 100% திருப்திப்படுத்தும். அதே நேரத்தில், தமிழ் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை ஈர்க்கும்.

இந்த திரைப்படத்தில் ‘ஜாவா’ பைக்கிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இப்போதைக்கு அதுமட்டும்தான் என்னால் சொல்ல முடியும். சிவராஜ்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

செப்டம்பரில் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வாரம் ‘ஜாவா’ என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான கிளிம்ப்ஸ் காட்சியை படமாக்க உள்ளோம்” என்றார்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கன்னடத் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது, நடிகர் சிவராஜ்குமாருடன் ‘ஜாவா’ படத்திற்காக இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த ‘ஈட்டி’ மற்றும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ஐங்கரன்’ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

Latest articles

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ‘வாழை’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 11-லிருந்து ஸ்டிரீமாகிறது!

மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான 'வாழை' திரைப்படத்தை வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து...

இந்த படம் இளைஞர்களை கவர்வதோடு அவர்களின் மூளைக்கும் வேலை கொடுக்கும்! -பிளாக் பட பிரஸ் மீட்டில் நடிகர் ஜீவா பேச்சு 

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள பிளாக் படம் வரும் அக்டோபர் 11-ம்...

நடிகர் கே சி பிரபாத்துக்கு யாமம் படப்பிடிப்பில் ஹார்ட் அட்டாக்! சிம்ஸில் தொடரும் சிகிச்சை.

கே சி பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த் திரையுலகில்  தயாரிப்பாளராக கால்பதித்தார். அந்த படத்தில் நடிகராக...

தமிழ்நாடு முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற, சென்னை டிடிகே சாலை துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழா!

சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான...

More like this