HomeMovie Reviewஹெச் எம் எம் (ஹக் மீ மோர்) சினிமா விமர்சனம்

ஹெச் எம் எம் (ஹக் மீ மோர்) சினிமா விமர்சனம்

Published on

திகில் பட ரேஞ்சுக்கான விறுவிறுப்பில் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்கல் என சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவம் தருகிற ‘ஹெச் எம் எம்.’

நள்ளிரவு நேரத்தில் ஒரு இளம்பெண், அந்த மலைப் பிரதேச வீட்டில் தனியாக இருக்கும் இன்னொரு இளம்பெண்ணைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்துகிறாள். அந்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வருகிற முகமூடி அணிந்த நபர் ஒருவர், வாழ்த்து சொல்லிவிட்டு புறப்பட்ட பெண்ணை  ஆயுதத்தால் தாக்கி கொலை செய்கிறார். அடுத்ததாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை குறி வைக்கிறார். அவள் தன்னைக் கொல்ல வரும் நபரிடமிருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள்.

இப்படி சூடுபிடிக்கும் கதை, அவள் தப்பித்து விடுவாளா? அல்லது அவளது பிறந்தநாள் இறந்த நாளாகி விடுமா? கொலையாளி யார்? அந்த பெண்களை கொலை செய்ய முடுவெடுத்தது ஏன்? என்றெல்லாம் நமக்குள் பல கேள்விகளை உருவாக்குகிறது. அதற்கெல்லாம் படத்தின் பின்பாதியில் விடை தருகிறது இயக்குநர் நரசிம்மன் பக்கிரிசாமியின் திரைக்கதை…

படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிற நரசிம்மன் பக்கிரிசாமியே கதை நாயகனாய் களமிறங்கியிருக்கிறார். சட்டவிரோதமாக செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கிற விஞ்ஞானி பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். விஞ்ஞானி என்றால் சோதனைக் கூடம், கம்ப்யூட்டர்கள், கருவிகள் சூழ்ந்திருக்கிற இடத்தில் சுற்றிச் சுழல்வார் என்று எதிர்பார்த்தால், உம்ஹூம்… ஒரு அறை, அதில் ஒரு லேப்டாப் என எளிமையாக முடித்துக் கொண்டிருக்கிறார். நாட்டுக்குத் துரோகம் செய்ய தயாராகும் அவர், தன் ஆராய்ச்சி முடிவுகளை களவாடிய துரோகிகளை களையெடுக்கும்போது நடிப்பில் கணிசமான மிரட்டல் எட்டிப் பார்க்கிறது.

ஒரு பக்கம் பார்த்தால் ஜப்பானியப் பெண்ணாக, இன்னொரு கோணத்தில் பார்த்தால் நேபாளப் பெண்ணாக இருவேறு தோற்றம் தருகிறார் கதைநாயகி சுமீரா. முகமூடி மனிதனை பார்த்து மிரளும்போது பொருத்தமான முகபாவம் காட்டியிருக்கும் அவர், உயிர் தப்பிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் துடிப்பாக வெளிப்படுகிறார். நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் வில்லத்தனத்தில் கவனம் ஈர்க்கிறது அவரது கொஞ்சலும் மிஞ்சலுமான நடிப்பு.

சுமீராவின் சிநேகிதியாக வருகிற ஷர்மி, ஷர்மியின் காதலர், விஞ்ஞானியின் நண்பராக வருகிறவர் என மற்றவர்களின் பங்களிப்பு ஊறுகாய் அளவுக்கே தேவைப்பட அதை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

புரூஸ் அமைத்திருக்கும் பின்னணி இசை, ஊட்டியின் அழகை அள்ளி வந்திருக்கும் கிரணின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம்.

‘ஹக் மீ மோர், ஹக் மீ மோர்’ என இதமான இசைப் பின்னணியில் ஒலிக்கும் வரிகளைத் தவிர படத்தில் பாடல்கள் ஏதுமில்லை; அது குறையாகவும் தெரியவில்லை.

பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் சாதாரணமாக எடுக்கப்பட்டிருப்பது உட்பட சிலபல குறைகள் படத்தின் பலவீனம்.

மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என மிகச்சிலரின் நடிப்பில், எளிமையான பட்ஜெட்டில் ‘ஹக் மீ மோர்’ தந்திருக்கும் இயக்குநர், கதைக்கான பட்ஜெட் கிடைக்கிற பட்சத்தில் அடுத்தடுத்த படங்களை ஒன்ஸ் மோர் பார்க்கும்படி உருவாக்குவார் என்று நம்பலாம்!

Rating 2.5 / 5

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...