நரசிம்மன் பக்கிரிசாமி கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘ஹெச்.எம்.எம்.’
ஒரே நள்ளிரவில் நடக்கும் பரபரப்பான கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நரசிம்மன், சுமிரா, சிவா, ஷர்மிளா, அனுராக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில், ஓர் இரவில், முகமூடி அணிந்த உருவம் மூன்று கொலைகளை செய்கிறது.
அந்த முகமூடிக்குள் இருப்பது யார்? நடந்த கொடூர கொலைகளுக்கான காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மிகவும் விறுவிறுப்பாக, நள்ளிரவுப் பின்னணியில், திடுக்கிடும் சம்பவங்களுடனும் எதிர்பாராத திருப்பங்களுடனும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: ‘பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ்’ நரசிம்மன் பக்கிரிசாமி
இணை இயக்கம்: துரைராஜ், சிவக்குமார்
ஒளிப்பதிவு: கிரண்
பின்னணி இசை: புரூஷ்
படத்தொகுப்பு: துரைராஜ்
சண்டை பயிற்சி: ‘ஸ்டண்ட்’ சுரேஷ்
மக்கள் தொடர்பு: வெங்கட்

