HomeMovie Reviewகாந்தி கண்ணாடி சினிமா விமர்சனம்

காந்தி கண்ணாடி சினிமா விமர்சனம்

Published on

உணர்வுபூர்வமான கதையில், எளிமையான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ‘காந்தி கண்ணாடி.’

செக்யூரிட்டி வேலையிலிருக்கும் சீனியர் சிட்டிசன் காந்தி மகான் மனைவியின் சந்தோஷத்துக்காக 60-ம் கல்யாணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறார். அதற்காக ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தும் கதிரை அணுகுகிறார். காந்தி எதிர்பார்க்கும்படி அந்த கல்யாணத்தை நடத்தி முடிக்க 50 லட்சத்துக்கும் அதிக செலவாகும் என்கிறார் கதிர். அந்த பணத்தை தருவதாக சொல்கிறார் காந்தி.

கதை இப்படி துவங்க, சாதாரண செக்யூரிட்டியால் எப்படி அத்தனை லட்சத்தை புரட்ட முடியும்? கல்யாணம் நடக்குமா நடக்காதா? என்ற நம் மனதில் உருவாகும் சில கேள்விகளுக்கு பதில்களாய் கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…

மனைவி மீது காட்டும் அளவுகடந்த குழந்தைத் தனமான பாசம், மனைவியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் ஆர்வம், ஒரு கோடி ரூபாய் கைக்கு கிடைத்தும் அது பயன்படாத நிலைமையில் பதறித் துடித்தல் என கதையின் முக்கியப் பகுதிகளை தாங்கிப் பிடிக்கும் பொறுப்பு பாலாஜி சக்திவேலுக்கு. மனிதர் வெகுளித்தனம் என்ற பெயரில் கொஞ்சம் அதிகமாகவே நடித்து அந்த பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறார்.

கதைநாயகன் பாலாஜி சக்திவேல் என்றால் கதாநாயகன் கதிராக பாலா. விஜய் டிவி’யிலிருந்து மற்றுமொரு ஹீரோ. முதல் படம்; நடிப்பில் அலட்டல் தெரிந்தால் விமர்சனங்களை சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்து களமிறங்கியிருக்கிறார். பணத்தின் மீது குறிக்கோளாய் இருப்பது, அதனால் காதலியின் வெறுப்ப்புக்கு ஆளாவது, தன்னை தேடி வந்த காந்தி மகான் கையில் ஒரு கோடி கிடைத்ததும் அதில் தன்னால் எந்தளவு சுருட்ட முடியும் என திட்டமிடுவது, சிலபல அனுபவங்களுக்குப் பிறகு பணத்தை விடவும் மகிழ்ச்சி தருகிற விசயம் உண்டு என உணர்வது… இப்படி பல காட்சிகளில் பொருத்தமான அளவான நடிப்பைத் தந்து, காமெடி காட்சிகளில் ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார்.

காதலனை பிடிக்கும்; அவன் பணத்தின் மீது குறிக்கோளாக இருப்பது பிடிக்காது என்ற மனநிலையில் இருப்பவராக கதாநாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி தந்திருக்கும் நடிப்பு நேர்த்தி.

வெள்ளை உள்ளம், கணவர் மீது கொள்ளைப் பாசம் என அன்பாலும் அழுகையாலும் நெகிழ வைக்கிறார் பாலாஜி சக்திவேலுவின் மனைவியாக வருகிற ஊர்வசி அர்ச்சனா.

பாலாவின் நண்பனாக வருகிற மதன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேவைக்கேற்ப நடித்திருக்க, ‘வண்டி வண்டி புல்லட்டு வண்டி’ பாடல் மூலம் உற்சாகத்தையும் ‘திமிருக்காரி’ பாடல் மூலம் இதத்தையும் தருகிறது விவேக் – மெர்வின் கூட்டணி.

பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவு நேர்த்தி.

60 வயதிலும் புது மாப்பிள்ளை போல் மனைவியை நேசிக்கிற ஒருவர், சூழ்நிலை தந்த கசப்பான அனுபவங்களால் பணத்தின் மீது பற்று வைக்கிற இளைஞர் என இருவருக்கிடையில் தொடர்பு உருவாகும் விதமாக கதையை உருவாக்கி, பணத்தையும் தாண்டி மனதுக்கு நிறைவு தரும் விஷயங்கள் உலகத்தில் உண்டு என்பதை எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர் ஷெரிஃபை படத்தின் குறைகளைத் தள்ளிவைத்து விட்டு பாராட்டலாம்!

Rating 3 / 5

Latest articles

18-ம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வில் திரைக் கலைஞர்களுடன் TVK தலைவர் வேல்முருகன் பங்கேற்று உற்சாகம்!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான...

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்! -’29’ பட விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேச்சு

'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் '29' படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ்,...

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட்...

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணையும் ‘பிரௌன் மணி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani...

More like this