Monday, March 24, 2025
spot_img
HomeCinemaவிஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்த ‘காந்தி டாக்ஸ்’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற முதல்...

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்த ‘காந்தி டாக்ஸ்’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற முதல் அமைதி திரைப்படமாக தேர்வு!

Published on

விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிளாக் காமெடியை அடிப்படையாகக் கொண்ட ‘காந்தி டாக்ஸ்’ என்ற அமைதிப் படத்தை கியூரியஸ் மற்றும் மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கிறது. அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கிஷோர் பி பெலேகர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் இப்போது கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா 2023 இல் திரையிடப்பட்ட முதல் அமைதி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம் டார்க் காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஒரு கதாபாத்திரம் தனது நிதித் தேவைகளைக் கையாளும் போது, அந்தக் கதாபாத்திரத்தின் பணத்தேவை மற்றவர்களின் வாழ்க்கையில் எப்படி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை படம் விவரிக்கிறது. ஒரு வேலையில்லா பட்டதாரி, தனக்கான வேலையை சாத்தியமாக்க போராடும் போது அவன் வாழ்வில் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு திருடனைக் கடக்கிறான். அப்போது அவன் வாழ்க்கையில் எப்படியான திருப்பம் ஏற்படுகிறது என்பதையும் கதை விவரிக்கிறது. ‘காந்தி டாக்ஸ்’ படம் உரையாடல் இல்லாமல் காட்சிகள் மூலம் கதை சொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் கிஷோர் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகராக தனது ஒப்பற்ற திறமையை வெளிப்படுத்தி வருகிறார் மற்றும் ‘மிஷன் வாஸ்கோ டா காமா’ என்ற தலைப்பில் அவர் சிறந்த நாடகத்திற்காக ஒரே ஆண்டில் 25 விருதுகளையும் வென்றுள்ளார்.  மேலும்,  அஷூதோஷ் ராணா நடித்த பாராட்டப்பட்ட மராத்தி படங்களான ‘யேடா’, ‘சா சசுச்சா’ மற்றும் ஃபீமெல் எம்பவர்மெண்ட் ஆன்ந்தாலஜி ‘R-E-S-P-E-C-T’ ஆகியவற்றையும் கிஷோர் இயக்கியுள்ளார்.

இயக்குநர் கிஷோர் கூறும்போது, “மௌனப் படம் எடுப்பது சாதாரணமானது அல்ல. இது ஒரு கதை சொல்லும் வடிவம். உரையாடல் இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவது பயமாக மட்டுமல்ல, சுவாரஸ்யமாகவும் சவாலாகவும் இருந்தது. மேலும், இந்த சவால்கள் எழுத்து, படமாக்கல், மற்றும்  எடிட்டிங் ஆகியவற்றிலும் இருந்தது. சுமார் 20 ஆண்டுகளில் எனக்கு ‘காந்தி டாக்ஸ்’  நிறைவான மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்றார்.

தொழில்நுட்ப குழு

புரொடக்ஷன் ஹவுஸ்: ஜீ ஸ்டுடியோஸ், கியூரியஸ் & மூவிமில்,
எழுத்து மற்றும் இயக்கம்: கிஷோர் பி பெலேகர்,
ஒளிப்பதிவு: கரண் பி. ராவத்,
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: துர்காபிரசாத் மஹாபத்ரா,
ஆடை வடிவமைப்பாளர்கள்: கவிதா பிரியங்கா துபே நீது பரத்வாஜ்,
ஒலி வடிவமைப்பாளர்: ஜஸ்டின் ஜோஸ்,
இசை மேற்பார்வையாளர்: ஹிரால் விராடியா,
மேக் அப் டிசைனர்: ரோஹித் மகாதிக்,
எடிட்டர்: ஆஷிஷ் மத்ரே.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...