Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaகமல்ஹாசன் நடித்த குணா' திரைப்பட ரீ ரிலீஸ் விவகாரம்... தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவு!

கமல்ஹாசன் நடித்த குணா’ திரைப்பட ரீ ரிலீஸ் விவகாரம்… தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவு!

Published on

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்து கடந்த 1991ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் குணா.’ இந்த படம் மீண்டும் கடந்த ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார். மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறு வெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்தார்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!