விஜய் தேவரகொண்டா, ‘சீதா ராமம்’ படப்புகழ் மிருணாள் தாக்கூர் நடிக்க, பரசுராம் பெட்லா இயக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் மாஸாக, கிளாஸாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருந்தது. இந்த நிலையில் இன்று படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு கண்ணைக் கவரும் போஸ்டரில் வெளியாகியுள்ளது.
போஸ்டரில் விஜய் தேவரகொண்டா லுங்கி அணிந்து, தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டும், வாயில் ஆதார் அட்டையுடன் ஓடுவது போல ஒரு சாதாரண நடுத்தரக் கணவரின் வாழ்க்கையை கச்சிதமாக இந்த போஸ்டர் படம்பிடித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரிலீஸ் தேதி அறிவிப்பால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
கோபிசுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தை, பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.