இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தொடங்கிய படத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக வழங்கும் படம் ‘ஃபைட் கிளப்.’
விஜய் குமார் இந்த படத்தில் கதைநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த படத்தை, ‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ ஆதித்யா தயாரித்திருக்கிறார். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய்குமார் பணியாற்றியுள்ளார்.
அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்க, படத்தின் கதையை சசி எழுதியுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, கதாநாயகனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படக்குழு:- கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன், அபுபக்கர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.