Friday, October 4, 2024
spot_img
HomeCinema‘கலைஞர் 100' விழாவில் முதலமைச்சர் அறிவித்த பூந்தமல்லி திரைப்பட நகர் பயன்பாட்டுக்கு வந்தபின் படத் தயாரிப்பு...

‘கலைஞர் 100′ விழாவில் முதலமைச்சர் அறிவித்த பூந்தமல்லி திரைப்பட நகர் பயன்பாட்டுக்கு வந்தபின் படத் தயாரிப்பு செலவில் 40% மிச்சமாகும்! -‘இ மெயில்’ பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

Published on

கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ள படம் ‘இ மெயில்.’ மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது.

எஸ் ஆர் ராஜன் இயக்கி, தயாரித்துள்ள இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஜனவரி 9; 2024 அன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பல இன்னும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் எஸ்.ஆர் ராஜன் பேசும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆக்சன், காமெடி, சென்டிமெண்ட் எல்லாமே இருக்கிறது. இரண்டு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள் உள்ளது. மும்பை, கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி என ஐந்து மாநிலங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி உள்ளேன். இந்த படம் ஒரு ஆன்லைன் கேம் மோசடி பற்றிய கதை” என்றார்.

நாயகன் அசோக் குமார் பேசும்போது, “இயக்குநர் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஒரு அழகான திரைக்கதையை நிறைய திருப்பங்களுடன் அவர் அமைத்துள்ளார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ஜாக்கிசான் மற்றும் குங்பூ படங்களிலிருந்து குறிப்புகளை எடுத்து வடிவமைத்தார்கள். நேபாளத்திலிருந்து வந்த பீர் மாஸ்டர் என்பவர் சண்டை பயிற்சியை அமைத்துக் கொடுத்தார். சண்டையின்போது எனது காது கிழிந்து விட்டது. மக்களிடம் இந்த படம் போய் சேரும்போது அந்த வலியெல்லாம் பெரிதாக தெரியாது” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, “இந்த படம் ஒரு கேமை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பது தெரிகிறது. கேம் என்றாலே பிரச்சினைதான். அது பிக்பாஸ் கேமாக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி எந்த கேமாக இருந்தாலும் அதில் நிச்சயமாக நமது மனது ஈடுபடத்தான் செய்யும். நாம் என்னதான் விளையாட்டிற்குள் சென்றாலும் கூட நமது மனதை பாதுகாப்பாக தற்காத்து வைக்க வேண்டும். ஆனால் அது இந்தக்கால தலைமுறையினரிடம் மிகவும் குறைவாக இருக்கிறது. பிறந்த குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்மை விட எல்லாமே அதிகமாக தெரிகிறது. எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இ மெயில் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் இருக்கும் நபர்களை நல்வழிப்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன்.

சமீபத்தில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் இதை மனதார வரவேற்கிறோம்.

கடந்த பத்து வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களுக்கு சோதனைகள், கஷ்டங்கள். வேதனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த திரைப்பட நகர் உருவாகிவிட்டால் நிச்சயமாக தயாரிப்பு செலவில் ஒரு 40 சதவீதம் மிச்சமாகும். அந்த திரைப்பட நகருக்கு டாக்டர் கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

படக்குழு:-
அவினாஷ் கவாஸ்கர் இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசையமைத்துள்ளார்.

கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

Latest articles

‘ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ்’ வகை படைப்பாக ஆலியா பட், ஷர்வரி நடிக்கும் ‘ஆல்ஃபா’ 2025 கிறிஸ்துமஸ் நன்னாளில் ரிலீஸ்!

  பெண்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் 'ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ்' திரைப்படம் 'ஆல்ஃபா.' பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில்...

போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் சம்யுக்தா; தாதாவாக ஆனந்த்ராஜ்… பூஜையுடன் துவங்கியது ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு!

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த்ராஜ் தாதாவாகவும் நடிக்கும் 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. வடசென்னை...

அனைவருக்கும் அனுமதி, அனைவருக்கும் பரிசு… நடிகை சாக்ஷி அகர்வால் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிற ஏபிசி டாக்கீஸின் தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்!

சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ்,...

ABC Talkies Announces the Fourth Edition of its Flagship Initiative – The Big Shorts Challenge – Tamil Edition and network expansion

  ABC Talkies, the pioneering open-access film streaming OTT platform dedicated to independent filmmakers, is...

More like this

‘ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ்’ வகை படைப்பாக ஆலியா பட், ஷர்வரி நடிக்கும் ‘ஆல்ஃபா’ 2025 கிறிஸ்துமஸ் நன்னாளில் ரிலீஸ்!

  பெண்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் 'ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ்' திரைப்படம் 'ஆல்ஃபா.' பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில்...

போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் சம்யுக்தா; தாதாவாக ஆனந்த்ராஜ்… பூஜையுடன் துவங்கியது ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு!

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த்ராஜ் தாதாவாகவும் நடிக்கும் 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. வடசென்னை...

அனைவருக்கும் அனுமதி, அனைவருக்கும் பரிசு… நடிகை சாக்ஷி அகர்வால் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிற ஏபிசி டாக்கீஸின் தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்!

சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ்,...